முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் சட்டசபை தேர்தல் இடதுசாரி கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது- சந்திரசூடன்

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

திருவனந்தபுரம்,மார்ச்.- 13 - வரும் சட்டசபை தேர்தல் இடதுசாரி கட்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று இடதுசாரி கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ஜே.சந்திரசூடன் கூறியுள்ளார். கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் வந்த சந்திரசூடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் வரும் 5 மாநில சட்டசபை தேர்தலானது நாட்டில் இடதுசாரி கட்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த தேர்தலில் ஊழல் மற்றும் வகுப்புவாத்தை எதிர்த்து பிரசாரம் செய்வதே இடதுசாரி கட்சிகளின் கொள்கையாகும். கேரளம், மேற்குவங்காள மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டியிருக்கிறார்கள். நாட்டில் உள்ள ஊழல் சக்திகளை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காப்பாற்றி வருகிறது. ஊழல் எந்த மட்டத்தில் நடந்தாலும் அதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மூடிமறைக்க தயாராக இருக்கிறது. ஊழல் வெளிவந்தவுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது மன்னிப்பு கேட்டு தனது பொறுப்பில் இருந்து விலகிக்கொள்கிறது. சென்னையில் தி.மு.க. தலைமையகத்தில் தொகுதி பங்கீடு குறித்து முதல்வர் கருணாநிதியும் ப.சிதம்பரமும் பேசிக்கொண்டியிருக்கும்போது மறுபக்கம் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. இப்படி பேச்சுவார்த்தை நடக்கும்போது சி.பி.ஐ.யின் விசாரணை எப்படி இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் என்று சந்திரசூடன் கூறினா

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!