முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் அமெரிக்க படைகள் வெளியேற்றம்

வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், டிச.16 - ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த 9 ஆண்டு கால போர் அதிகாரபூர்வமாக நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பாக்தாத்தில் அமெரிக்க அமைத்த ராணுவ மையத்தில் அமெரிக்க கொடி இறக்கப்படவுள்ளது. ஈராக்கில் அதிபர் சதாம் உசேன், அணு ஆயுதம் தயாரிப்பதாக பொய் கூறிக் கொண்டு கடந்த 2003 ம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். ஆனால் எந்த அணு ஆயுதமும் அங்கு சிக்கவில்லை. இந்தப் போரில் சதாமின் ஆட்சி தூக்கியெறியப்பட்டு, 2003 ம் ஆண்டு டிசம்பரில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். அவரது மூத்த மகன்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளும் கொன்று குவிக்கப்பட்டனர். சதாமின் மனைவி, மகள் உள்ளிட்டோர் மட்டும் தப்பி ஜோர்டானில் தஞ்சம் புகுந்தனர். 

2007 ம் ஆண்டு போர் மிக உச்சத்தில் இருந்த போது மிக அதிகபட்சமாக சுமார் 1. 7 லட்சம் அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்தன. இந்த போரில் சுமார் ஒரு லட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 4 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்களும் பலியானார்கள். 30 ஆயிரம் வீரர்கள் காயமடைந்தனர். இந்தப் போருக்காக அமெரிக்கா செலவிட்ட தொகை ரூ. 45 லட்சம் கோடியை தாண்டும். மொத்தத்தில் சுமார் 1.5 லட்சம் அமெரிக்க வீரர்கள் ஈராக் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் தேர்தலும் நடத்தப்பட்டு அமெரிக்க ஆதரவுடனான அரசும் ஈராக்கில் அமைக்கப்பட்டது. அல் மாலிகி இப்போது பிரதமராக உள்ளார். 

இந்த நிலையில் ஈராக் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் அமெரிக்காவில் அதிகரித்தன. இதையடுத்து 2011 ம் ஆண்டு இறுதிக்குள் படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஒபாமாவும் அமெரிக்க படைகளின் வாபஸ் வேகப்படுத்தப்படும் என்று அறிவித்து பெரும்பாலான படைகளை திரும்ப பெற்று விட்டார். கடைசியாக சுமார் 5 ஆயிரத்து 500 வீரர்கள் மட்டும் ஈராக்கில் இருந்தனர். இவர்களும் நாடு திரும்புவதற்காக குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களுக்கு வர ஆரம்பித்து விட்டனர். அமெரிக்க படைகள் வெளியேறுவதை பெரும்பாலான ஈராக்கியர்கள் வரவேற்றாலும் நாட்டில் உள்நாட்டு போர் வெடிக்கலாம், தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. 

ஈராக்கில் அரசுக்கு எதிராக சன்னி பிரிவினர் தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சமும், இதை ஒடுக்க அரசுக்கு ஷியா பிரிவினரை அதிகமாக கொண்ட ஈரான் உதவலாம், பதிலுக்கு சன்னி பிரிவினருக்கு ஆதரவாக சவுதி அரேபியா மறைமுகமாக களமிறங்கலாம் என்ற அச்சமும் உள்ளது. அமெரிக்க படைகள் வாபசாவதையொட்டி ஈராக்கின் பல இடங்களில் அமெரிக்க கொடிகளை எறிந்து மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago