முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் சென்னையில் குரேஷி இன்று ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.- 13 - தமிழகத்தில் சட்டசபை ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி மற்றும் இரண்டு ஆணையர்களும் சென்னை வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.  தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பிரச்சினை முடியும் தருவாயில் உள்ளது. அரசியல் கட்சிகள் போட்டியிட விருப்புவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி சார்பாக 125-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. தமிழக தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவத்தினர் மற்றும் மத்திய படையினர் அனுப்பப்பட்டு வருகின்றனர். 

இந்தநிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு தலைமை தேர்தல் கமிஷனர் ஒய்.எஸ்.குரேஷி, தேர்தல் கமிஷனர்கள் வி.எஸ். சம்பத், எச்.எஸ்.பிரமா ஆகியோர் இன்று சென்னை வருகிறார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை, தேர்தல் அமைதியாகவும் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தேர்தல் கமிஷனர்கள் ஆய்வு செய்வார்கள். இரண்டு நாட்கள் ஆய்வு நடத்தும் தேர்தல் கமிஷனர்கள், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மற்றும் உயர் சிவில் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடனும் தேர்தல் பாதுகாப்பு குறித்து விவாதிக்கிறார்கள். புகைப்படத்துடனான வாக்காளர் அடையாள அட்டை,வாக்காளர் பட்டியலில் புகைப்படத்துடனான பெயர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்கிறார்கள். பதட்டம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கு பாதுகாப்பு மற்றும் மத்திய படையினர் அனுப்பப்பட்டுள்ளனரா? பாதுகாப்பு படையினர் எத்தனை பேர் தேவை என்பதையெல்லாம் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷியும் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் சம்பத் மற்றும் பிரமாவும் ஆய்வு செய்கிறார்கள். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல் நடக்கிறது. மே மாதம் 13-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அ.தி.மு.க. கூட்டணிக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் சேரும் கட்சிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது, அ.தி.மு.க. கூட்டணியானது வெற்றி கூட்டணி என்பதை உறுதி செய்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago