முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்கழி பிறப்பு: ஆண்டாளுக்கு திருப்பாவை பட்டுப்புடவை

ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி,டிச.18 - ஸ்ரீவில்லியில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ஆண்டாளுக்கு திருப்பாவை பாடல்கள் 30 இடம்பெற்ற பட்டுபுடவை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். ஸ்ரீவில்லியில் குடிகொண்டுள்ள பெண் தெய்வம் ஆண்டாள் தான் வணங்கிய ஸ்ரீ ரங்க அரங்கபெருமான் மீது தீராத காதல் கொண்டு மார்கழி மாதம் பாவை நோம்பு இருந்து மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்நாள், வையத்து வாழ் வீர்காள், ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி ஆழி மழைகண்ணா, ஒன்றும் நீ மாயனை மன்னு வடமதுரை மைந்தனை என 30 பாசுரங்களை பாடி பகவானை அடைந்தார்.

இதனை முன்னிட்டு மார்கழி மாதம் உகந்த மாதம் ஆகும்  என்பதால் மார்கழி மாத பிறப்பான நேற்று(17ந்தேதி) ஸ்ரீவில்லி ஆண்டாளுக்கு அவர் இயற்றிய திருப்பாவை பாடல்கள் 30 இடம்பெற்று நெய்யப்பட்ட 16 ஜெக பட்டுபுடவை அணிவிக்கப்பட்டு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடத்தப்பட்டது. 

பூஜைகளை கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர், ஸ்தானீகம் ரங்கராஜன் என்ற ரமேஸ் ஆகியோர் பூஜைகளை செய்தனர். 

ஆண்டிற்கு ஒரு முறை ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாசுரங்களை கொண்டு நெய்யப்பட்ட பட்டுபுடவை ஆண்டாளுக்கு அணிவிப்பதால் அதனை காண உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ஆண்டாளை வழிபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago