முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று லோக்பால் மசோதா தாக்கல் அண்ணா ஹசாரே பார்லி.க்கு செல்கிறார்

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,டிச.- 19  - பாராளுமன்றத்தில் இன்று லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதை பார்ப்பதற்காக அண்ணா ஹசாரே பாராளுமன்றத்திற்கு இன்று செல்கிறார். இதற்காக அவரது சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடிக்கிறார்.  நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தார். ஆனால் இந்த கூட்டத்தொடரில் மசோதா நிறைவேறுவது சந்தேகம் என்று கூறிய அண்ணா ஹசாரே, பிரதமருக்கும் கடிதம் எழுதினார். அதில் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாக எச்சரித்தார். இந்தநிலையில் பாராளுமன்றத்தில் இன்று லோக்பால் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதற்கு எந்தெந்த கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. எந்தெந்த கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. மசோதாவில் உள்ள சரத்துக்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு,பார்வையிடுவதற்காக ஹசாரேவும் இன்று பாராளுமன்றத்திற்கு செல்ல முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்காக அவர் ஐதராபாத் பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்புகிறார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தென் மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள ஹசாரே நேற்று முன்தினம் பெங்களூரில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதனையடுத்து நேற்று அவர் சென்னை வந்தார். இன்று ஐதராபாத்திற்கு செல்வதாக இருந்தது. ஆனால் ஐதராபாத் பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு இன்று ஹசாரே செல்கிறார் என்று அவரது குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும்போது பார்வையாளர் பகுதியில் இருக்க ஹசாரே விருப்பம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்திற்கு ஹசாரே செல்லும்போது அவருடன் நாங்களும் செல்வோம் என்றும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்