முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலுவான லோக்பால்தான் வேண்டும் எல்.கே. அத்வானி திட்டவட்டம்

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டிச.- 19 - வலுவான கடுமையான லோக்பால் மசோதாதான் வேண்டும் என்றும் இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்றும் பாராளுமன்றத்தை தவிர வேறு யாரும் இதை தீர்மானிக்க முடியாது என்றும்  பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறுகையில், வலுவான கடுமையான லோக்பால் மசோதா வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் தங்கள் கட்சிக்கு இல்லை என்றார். லோக்பால் மசோதா விவகாரத்தில் இரு வழிகளே இல்லை.  ஒரே வழிதான் எனறும் அவர் கூறினார். நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்  இந்த மசோதா நிறைவேற்றப்படுமா என்பதில் சந்தேகத்தை தெரிவித்துள்ள அத்வானி மேலும் கூறுகையில்  அன்னா ஹசாரே குழுவினரை  தாங்கள் சந்தித்து பேசிய போது வலுவான லோக்பாலுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும்  கூறினார். லோக்பால் மசோதாவில் சில குறைபாடுகள் உள்ளன என்பதை அன்னா ஹசாரே குழுவினர் ஒப்புக்கொண்டனர் என்றும் புதிய மசோதாவில் இவை  களையப்படுமா அல்லது  களையப்படாதா என்பது அந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago