முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு உ.பி. முதல்வர் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, டிச.- 20 - முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உ.பி. முதல்வர் மாயாவதி மத்திய அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேத முதல்வர் மாயாவதி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளார். இதற்காக இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இப்போதுள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரலாம் என்று அவர் மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார். லக்னோவில் முஸ்லிம், ஷத்திரியர், வைசியர் பிரிவைச் சேர்ந்தோர் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் உ.பி.முதல்வர் மாயாவதி பேசினார். அப்போது அவர் பேசுகையில், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை பகுஜன்சமாஜ் கட்சி ஆதரிக்கிறது. இதற்கு ஏதுவாக இப்போது இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டை  மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அரசியல் அமைப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அப்படி கொண்டுவந்தால் அதை நாங்கள் ஆதரிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.  முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தேசிய அளவில் ஒரே கொள்கையை அமல்படுத்த வேண்டும். முஸ்லிம்களை காங்கிரஸ் எப்போதுமே காட்டிக்கொடுத்த வந்துள்ளது. அவர்களுக்காக எதையும் செய்யாமல் வாங்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் முஸ்லிம்களை பயன்படுத்தி வந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில்தான் மதக் கலவரங்கள் அதிகமாக ஏற்பட்டன. இது முஸ்லிம் மக்களின் மனதை பாதித்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினர் 40 ஆண்டு காலமாக காங்கிரஸ் ஆட்சியில் அச்சத்துடனேயே பாதுகாப்பின்றி வாழ வேண்டியிருந்தது. பாரதிய ஜனதாவும் காங்கிரசின் போக்கையை கடைபிடித்து வந்தது. 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ஆனால் இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் முஸ்லிம்களையே அதிக எண்ணிக்கையில் நிறுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்