முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. தேர்தல் வியூகம் குறித்து நாளை சோனியா முக்கிய முடிவு

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டிச.- 20 - உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அம்மாநில சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து வியூகத்தை நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா முடிவு செய்ய இருக்கிறார். உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உ.பி. தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிப்பதற்காக  காங்கிரஸ் கட்சியின் ஆட்சிமன்ற குழுக் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. உடல் நலம் குன்றியதால் கடந்த சில மாதங்களாக முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த சோனியா காந்தி, நாளை முதல் முறையாக  காங்கிரஸ் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார். லோக்பால் மசோதா குறித்த விவாதங்கள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சோனியா பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நடைபெற உள்ள உ.பி. சட்மன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா முக்கிய  விவாதம் நடத்துவார். அப்போது உ.பி. தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான வியூகத்தை அவர் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி. தேர்தல் பிரச்சார பணிகளில் சோனியாவின் மகனும்  காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ராகுல் காந்தி தீவிரமாக ஈடுபட்டு  வருகிறார்.இந்த தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று  அவர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார். எனவே இந்த கூட்டத்தில்  ஐக்கிய முற்போக்கு கூட்டணியின்  தலைவராகவும் இருக்கும் சோனியா காந்தி எடுக்கும் முடிவு  முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கிய  தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago