முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய அமைச்சர் அஜீத் சிங்கை அறிமுகப்படுத்தினார் மன்மோகன்

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.- 20- புதிய மத்திய அமைச்சராக பதவி ஏற்றுள்ள அஜீத் சிங்கை நேற்று ராஜ்ய சபையில் உறுப்பினர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிமுகப்படுத்தி வைத்தார். உ.பி. தேர்தலை முன்னிட்டு  அஜீத்சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டு சேர்ந்துள்ளது.  5 எம்.பி.க்களைக் கொண்ட இந்த கட்சியின் தலைவர் அஜீத் சிங் நேற்று முன்தினம் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். பாராளுமன்றத்தின் ராஜ்ய சபையில்  அஜீத் சிங்கை நேற்று பிரதமர் மன்மோகன் சிங் சபை உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ராஜ்ய சபையில் நேற்று கேள்வி நேரத்திற்கு பிறகு இந்த அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அஜீத் சிங்கை ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எல்லா உறுப்பினர்களும் மேஜைகளை தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர். மத்திய அமைச்சரவையில் இவர் 77-வது அமைச்சராக இடம் பெற்றுள்ளார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் அஜீத் சிங்கிற்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்