முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் மாநிலத்தில் மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர். டிச. - 21 - காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் புதிதாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டு தோறும் குளிர் காலத்தில் பனிப்பொழிவு ஏற்படுவது சகஜம். இந்த ஆண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.  ஆனால் கடந்த ஒரு வார காலமாக இந்த பனிப்பொழிவு காணப்பட தா நிலையில் நேற்று மீண்டும் இந்த பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குல்மார்க், பகல்ஹாம் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் நேற்று புதிய பனிப்பொழிவு காணப்பட்டது. காஷ்மீரின் வடக்கில் உள்ள குல்மார்க் சுற்று தலத்தில் உள்ள பனிச்சறுக்கு  பகுதியில் பனிப்பொழிவு  காணப்பட்டது. இதே போல தென் பகுதியில் உள்ள பஹல்காம்  சுற்றுலா தலத்திலும் பனிப்பொழிவு காணப்பட்டது. குல்மார்க்கில் 1 செ.மீ. பனிப்பொழிவும்  3.2 மி.மீ. மழையும் பெய்துள்ளது. பஹல்காமில் 1 செ.மீ. பனிப்பொழிவும் 7.6 செ.மீ. மழையும்  பெய்துள்ளது. பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக இநத சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது. கோடை  தலைநகரான ஸ்ரீநரரிலும் கூட பனிப்பொழிவு காணப்பட்டது.இங்கு குறைந்தபட்ச வெப்ப நிலை பூஜ்ஜியம் டிகிரிக்கு கீழே உள்ளது.

பொதுவாக காஷ்மீர் மாநிலம் முழுவதுமே  புதிய  பனிப்பொழிவும்  ஆங்காங்கே மிதமான மழையும் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்