முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிவினைவாத குழுக்களுக்கு சீன ஆயுதங்கள் கடத்தலா? ஏ.கே.அந்தோணி

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, டிச. - 21 - வட கிழக்கு மாநிலங்களில் இயங்கி வரும் பிரிவினைவாத குழுக்களுக்கு சினாவில் உள்ள தரகர்கள் ஆயுதங்கள் விற்கின்றனர் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி மக்களவையில் தெரிவித்தார். கேள்வி நேரத்தின் போது எழுத்து மூலம் பதிலளித்த அவர், வட கிழக்கு மாநிலங்களில் இயங்கி வரும் பிரிவினைவாத இயக்கங்களுக்கு சீனாவின் யூனான் மாகாணத்தில் உள்ள சில ஆயுத தரகர்கள்தான் ஆயுதங்களை விற்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த ஆயுதங்கள் மியான்மர், வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் கடத்தப்படுகின்றன. வேறு சில தெற்காசிய நாடுகள் வழியாகவும் இந்த ஆயுதங்கள் கடத்தப்படுகின்றன. இது குறித்து அந்நாடுகளுடன் இந்தியா பேசி வருகிறது. எல்லை பகுதியில் அமைதி காக்கவும், கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கவும் மியான்மருடன் இந்தியா ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆயுத கடத்தல் பிரிவினைவாத குழுக்கள் நடமாட்டம் குறித்து சிறப்பு அறிவுறுத்தலும் செய்யப்பட்டுள்ளது என்றார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாட்டு விமானங்கள் 24 முறை நம் விண்வெளியில் அத்துமீறி பறந்துள்ளன என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்