முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்திரப்பிரதேச மாநில தேர்தல் மேலும் 3 கட்சிகள் கூட்டணி

புதன்கிழமை, 21 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ,டிச.- 21 - உத்திரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் 3 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.  உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி அல்லது ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஆய்த்தப்பணியில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன. மத்திய அமைச்சர் அஜீத் சிங் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இந்த நிலையில் மேலும் 3 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பண்டல்காந்த் காங்கிரஸ், அமைதி கட்சி, ஆப்ன தளம் ஆகிய கட்சிகள் நேற்று முறைப்படி கூட்டணி அமைத்துள்ளன. இந்த 3 கட்சிகளும் சேர்ந்து தேர்தலில் போட்டியிட கூட்டணி அமைத்துள்ளன. உத்திரப்பிரதேச மாநில மக்களுக்கு ஒரு வலுவான மாற்றுக்கட்சியை ஏற்படுத்திக்கொடுக்கவே நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம் எந்று அமைதி கட்சியின் தேசிய தலைவர் முகமத் அயூப் நேற்று லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். பண்டர்காந்த் பகுதியில் உள்ள முஸ்லீம் மக்களை பகுஜன்சமாஜ் கட்சி அரசு சுரண்டி வருகிறது என்று அந்த கட்சியின் தலைவர் ராஜா பண்டல்காந்த் குற்றஞ்சாட்டி உள்ளார். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் முதல்வராக முஸ்லீம் ஒருவர் முதன்முதலாக பதவி ஏற்பார் அல்லது ஒரு பெண் முதல்வராக பதவி ஏற்பார் என்றும் பண்டேலே கூறினார். ஊழல் மிகுந்த மாயாவதி கட்சி, காங்கிரஸ் மற்றும் குண்டர்கள் அடங்கிய சமாஜ்வாடி ஆகிய கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று ஆப்னா தளம் கட்சியின் பொதுச்செயலாளர் அனுப்ரியா படேல் தெரிவித்தார். வகுப்புவாத கட்சியான பாரதிய ஜனதாவையும் மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் அவர் கூறினார். தொகுதி உடன்பாடு குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அயூப், அமைதி கட்சி 230 தொகுதிகளிலும் ஆப்னாதளம் 130 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் பண்டெல்காந்த் கட்சியும் போட்டியிடும் என்றார். உத்திரப்பிரதேசத்தை 4 ஆக பிரிக்கும் மாநில அரசின் தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்திருப்பது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அயூப், மத்திய அரசு நிராகரிக்கவில்லை. சில கேள்விகளைத்தான் எழுப்பியுள்ளது என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்