முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப.சிதம்பரம் மீது உரிமை மீரல் தீர்மானம் கொண்டுவர பா.ஜ.முடிவு

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,டிச.- 21 - ஓட்டல் அதிபர் ஒருவருக்கு உதவி செய்த விவகாரம் தொடர்பான பிரச்சினையை பாராளுமன்றத்திற்கு வெளியே பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் பிரபல வழக்கறிஞருமாவார். இவர் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வருகிறார். அதேமாதிரி டெல்லியில் உள்ள ஒரு ஓட்டல் அதிபர் ஒருவரின் வழக்கிலும் ஆஜராகியுள்ளார். ஆனல் ஓட்டல் அதிபரை மோசடி மற்றும் ஏமாற்றுதல் வழக்கில் இருந்து காப்பாற்றியதாக ப.சிதம்பரம் மீது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாரதிய ஜனதா உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். இதை பாராளுமன்றத்திற்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்த ப.சிதம்பரம் மறுத்து உள்ளார். மத்திய அணைச்சர் ப.சிதம்பரம் குற்றமற்றவர் என்று பிரதமர் மன்மோகன் சிங்கே நற்சான்றிதழ் அளித்தார். ரஷ்யாவில் இருந்து மன்மோகன் சிங் விமானம் மூலம் டெல்லிக்கு திரும்புகையில் இதை பிரதமர் கூறினார். இதற்கும் பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அனைத்து தஸ்தாவேஜூகளையும் பார்த்த பின்னரே சிதம்பரம் விவகாரத்தில் மன்மோகன் சிங் கருத்து கூறியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பாராளுமன்றத்தை அவமதித்து விட்டார். அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பார்லிமெண்டரி கட்சி பிரிவு கூட்டம் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இருசபைகளின் எதிர்க்கட்சி தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி,யஷ்வந்த் சின்ஹா, ராஜ்நாத் சிங் உள்பட மூத்த தலைவர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ப.சிதம்பரத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.எஸ். அலுவாலியா தெரிவித்தார். ஓட்டல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்று நோட்டீஸ் கொடுத்த பின்னர், இது குறித்து பாராளுமன்றத்திற்கு வெளியே சிதம்பரம் விளக்கம் அளித்திருப்பது பாராளுமன்றத்தை அவமதிப்பது போன்றதாகும். அதனால் அவர் மீது பாராளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானத்தை யஷ்வந்த் சின்ஹா கொண்டு வருவார் என்று அலுவாலியா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்