முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதா பார்லி.யில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது

புதன்கிழமை, 21 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.-22-ஊழலை ஒழிக்க எல்லோரும் எதிர்பார்த்த லோக்பால் மசோதா இன்று லோக்சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. ராஜ்யசபையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. இதை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் பிரபல காந்தீயவாதியான அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இதனையொட்டி அவருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின்போது ஊழலை ஒழிக்க பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற சம்மதித்தது. இதனையொட்டி உண்ணாவிரதத்தை ஹசாரே வாபஸ் பெற்றார். அடுத்து பலமான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்றும் அதன் கட்டுப்பாட்டிற்குள் பிரதமர், சி.பி.ஐ., நீதிபதிகள், கடைநிலை ஊழியர்கள் ஆகியவர்களை சேர்க்கக்கோரியும் ஹசாரே மீண்டும் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார். மேலும் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், சோனியா, எதிர்க்கட்சி தலைவர்கள் எல்.கே. அத்வானி, சுஷ்மா சுவராஜ் மற்றும் பல தலைவர்களை சந்தித்து பலமான லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு கோரினார். லோக்பால் மசோதாவின் வரம்பிற்குள் யார், யாரை கொண்டு வருவது என்பதில் மத்திய அரசுக்கும் ஹசாரேவுக்கும் இடையே இன்னும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அதனால் பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி வருகின்ற 27-ம் தேதி ஹசாரே மீண்டும் உண்ணாவிரதமும் அதனையடுத்து சிறைநிரப்பும் போராட்டமும் நடத்தப்போவதாக ஹசாரே அறிவித்துள்ளார். இந்தநிலையில் லோக்பால் மசோதாவை நேற்றுமுன்தினம் மத்திய மூத்த அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல், சல்மான் குர்ஷித்,சரத்பவார் ஆகியோர் கூடி சேர்க்க வேண்டியவைகளை சேர்த்தும் எடுக்க வேண்டியவைகளை எடுத்தும் இறுதி வடிவம் கொடுத்தனர். இதற்கு மத்திய கேபினட் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதனையொட்டி லோக்பால் மசோதா இன்று காலை சரியாக 11 மணிக்கு லோக்சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று முழுவதும் லோக்பால் மசோதா மீது விவாதம் நடந்து பின்னர் இன்றே நிறைவேற்றப்படலாம் என்று தெரிகிறது. நாளை ராஜ்யசபையில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு லோக்பால் மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரின் ஒப்புதல் கிடைத்த பின்னர் மசோதாவின் நகல்கள் எம்.பி.க்கள் பார்வைக்கு அனுப்பப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாராளுமன்றத்தில் மேலும் பாராளுமன்றத்தில் மக்கள் சாசன மசோதா உள்பட இரண்டு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அதனால் நாடாளுமன்ற கூட்டத்தை மேலும் நீடிப்பது குறித்து முடிவு செய்ய பாராளுமன்ற நடவடிக்கைக்குழு நேற்று கூடியது.

லோக்பால் மசோதா தொடர்பாக ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை போக்க முடிந்தளவு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பிரச்சினைக்கு தீர்வுகாண எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா உள்பட பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள லோக்பால் மற்றும் மக்கள் சாசன மசோதாக்களுக்கு அண்ணா ஹசாரே எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தை ஹசாரே அறிவித்துள்ளார். அவரை திருப்திப்படுத்துவது மத்திய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. ஹசாரே சொல்வதையெல்லாம் மசோதாவில் சேர்க்க முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஹசாரே சொல்வதை கேட்க முடியாது என்றும் குருஷித் தெரிவித்தார். லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ. கொண்டு வரப்படவில்லை. அரசு கீழ்நிலை ஊழியர்களும் லோக்பால் மசோதா வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை என்றும் இவர்கள் மத்திய லஞ்ச ஒழிப்பு கமிஷன் வரம்பிற்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago