முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் முதல்வர் உலக நன்மைக்காக எடியூரப்பா யாகம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, டிச.- 22 - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா யாகம் நடத்திவருகிறார். கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்க காரணமாக இருந்தவர் எடியூரப்பா. ஆனால் அவர் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் எழுந்தன. ஊழல் புகாரில் சிக்கி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனால் முதல்வர் பதவி அவரது ஆதரவாளர் சதானந்த கவுடாவிற்கு கிடைத்தது.  ஊழல் புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட எடியூரப்பா தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். தற்போது மீண்டும் கர்நாடக முதல்வராகும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் எடியூரப்பா. இதுகுறித்த தனது விருப்பத்தையும் பா.ஜ.க. மேலிடத்திற்கு தெரிவித்துள்ளார்.  தற்போது எடியூரப்பா யாகம் ஒன்றை நடத்திவருகிறார்.  இந்த யாகத்தின் மூலம் தனக்கு நல்லது நடக்கும் என்று எடியூரப்பா நம்புகிறார். இந்த யாகம் கடந்த மாதம் 26 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் இந்த யாகத்தில் எடியூரப்பா கலந்துகொண்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்த எடியூரப்பா, உலக நன்மைக்காக இந்த யாகத்தை நடத்துகிறேன். இதில் கலந்துகொண்டதன் மூலம் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று நம்புகிறேன். கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதால் பதவி விலகினேன். அவர்களே எனது எதிர்காலத்தையும் தீர்மானப்பார்கள். வருகிற 15 ம் தேதிக்கு பிறகு எனக்கு நல்லது நடக்கும் என்று எடியூரப்பா நம்பிக்கையோடு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்