முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவகாரண பொருட்களுடன் இந்திய விமானம் ஜப்பான் புறப்பட்டு சென்றது

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி. மார்ச்.- 14 - பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டிற்கு நிவாரண பொருட்களுடன் இந்தியாவின் முதல் விமானம் நேற்று ஜப்பான் புறப்பட்டு சென்றது.
ஜப்பான் நாட்டின் வட கிழக்கு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கரமான பூகம்பத்தினாலும் அதன் காரணமாக ஏற்பட்ட சுனாமியினாலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா  உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் உதவி செய்ய முன்வந்துள்ளன.
நிவாரணப்பொருட்களுடன் இந்திய விமானம் ஒன்று நேற்று காலை டெல்லியிலிருந்து ஜப்பான் புறப்பட்டு சென்றது.
கம்பளியினால் ஆன தரமான போர்வைகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்கள் இந்த விமானம் மூலம்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.ழ
ஜப்பானில் தற்போது கடுமையான குளிர் இருப்பதால் இந்தியா அனுப்பி வைத்துள்ள நிவாரணப்பொருட்கள் அந்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் இந்த நிவாவண பொருட்கள் டெல்லியில் உள்ள ஜப்பான் தூதருடன் கலந்தாலோசித்த பிறகே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.ழ
ஜப்பானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தான் தொடர்ந்து தொடர்பு வைத்துக்கொண்டு இருப்பதாக  அவர் மேலும் தெரிவித்தார்.ழ
பாதிக்கப்பட்டுள்ள ஜப்பா
ன் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க  இந்தியா தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்ர.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்