முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாரிகள் வேலை நிறுத்தம்: கேரளாவுக்கு பால், காய்கறி தட்டுப்பாடு

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. - 22 - தமிழக லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து கேரளாவிற்கு பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள் அனைத்தும் நேற்று கேரளாவிற்கு போகவில்லை. இதனால் கேரளாவிற்கு நேற்று தமிழகத்தில் இருந்து பால், முட்டை, காய்கறி என எந்த அத்தியாவசிய பொருட்களும் போகவில்லை. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் தமிழக லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து கேரளாவிற்கு பொருட்கள் கொண்டு செல்லும் 30 ஆயிரம் லாரிகள் நேற்று ஒரு நாள் நிறுத்தப்பட்டன. சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் இருந்து கேரளாவிற்கு லாரிகள் செல்லவில்லை. முன்னதாக தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறுகையில்,  முல்லைப் பெரியாறு பிரச்சினை காரணமாக நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கேரளாவிற்கு அனைத்து வழித்தடங்களிலும் செல்லும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி, பால், முட்டை, பருப்பு வகைகள், கறிக்கோழி உள்ளிட்டவை அங்கு கொண்டு செல்லப்படவில்லை. மேலும் கேரள அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளுக்கும், லாரி டிரைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  நாமக்கல்லில் இருந்து லாரிகள் மூலம் தினமும் 40 லட்சம் முட்டைகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வந்தது. அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக மாடுகள் லாரிகளில் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பல லட்சம் மதிப்பிலான முட்டை, மஞ்சள், எண்ணெய், ஜவுளி போன்ற பொருட்கள் தேக்கமடைந்துள்ளது. கோவையில் இருந்து தினமும் ரூ. 500 கோடி மதிப்புள்ள காய்கறிகள், மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் லாரிகளில் அனுப்பப்பட்டு வந்தன. நேற்று முதல் லாரிகள் கேரளாவிற்கு இயக்கப்படாததால் கேரளாவில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. 

இதே போல் குமரி மாவட்டத்தில் இருந்து காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படவில்லை. இது குறித்து குமரி மாவட்ட லாரிகள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கணேசன் கூறுகையில், முல்லை பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு எந்த சரக்குகளையும் கொண்டு செல்வதில்லை என்று முடிவு செய்துள்ளோம். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து உப்பு, நெல்லை மாவட்டத்தில் இருந்து கட்டுமானத்திற்கு தேவையான மணல், குமரி மாவட்டத்தில் இருந்து காய்கறிகள், தோவாளை மார்க்கெட்டில் இருந்து பூக்கள் போன்றவை கேரளாவிற்கு கொண்டு செல்லப்படாததால் பொருட்கள் கிடைக்காமல் கேரளா திண்டாடி வருகிறது. இதனால் தெற்கு ரயில்வேயில் மலையாள அதிகாரிகளின் உதவியோடு ரயில்கள் மூலம் பொருட்களை அனுப்பி வைத்து வருவதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்