முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை உழவர் சந்தையில் கலெக்டர் சகாயம் திடீர் ஆய்வு

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை, டிச.- 22 -மதுரை மாவட்டம் சொக்கிகுளத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.உ.சகாயம்,இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  சொக்கிகுளத்தில் உள்ள உழவர் சந்தைக்கு சென்று தராசு மற்றும் எடைகற்களை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் காய்கறிகள் தரமாக உரிய விலையில் விற்கப்படுகிறதா என்றும், எடையளவு சரியாக உள்ளதா என்றும் கேட்டறிந்தார். அங்குள்ள டீக்கடைக்கு சென்று அங்கு திறந்த நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பலகாரங்களை பார்த்த மாவட்ட ஆட்சித்தலைவர் டீக்கடையின் உரிமையாளரை அழைத்து விற்கப்படும் பொருட்கள் பாதுகாப்பாக மூடி விற்கப்படவேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அங்கு வேர்கடலை  விற்றுக்கொண்டிருந்த 80 வயதான காமாயி என்ற மூதாட்டிக்கு இந்த தள்ளாத வயதிலும் உழைத்து கொண்டிருப்பதை பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தினார்.பீபீக்குளம் மெயின் ரோட்டில் உள்ள ஆட்டிறைச்சி கடைக்கு சென்று தூய்மையாக, சரியான எடையில் விற்கப்படுகிறதா என்றும் எடை இயந்திரம் முத்திரை வைக்கப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார். ் மொய்க்காமல் பாதுகாப்பாக வைக்குமாறும் இறைச்சி கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துமாறும், சுகாதார கேடு ஏற்படாமல் பராமரிக்குமாறும் அறிவுரை வழங்கினார். பாண்டிய நெடுஞ்செழியன் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு சென்று வருகைப்பதிவேட்டை ஆய்வு செய்தார். விளையாட்டு மைதானம், கணினி அறை, நூலகம், அறிவியல் ஆய்வுக்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார். நூலகத்தில் மாணவர்களிடம் ஆங்கில செய்திதாள்களை வாசிக்க சொல்லி கேட்டார். மாணவர்கள் ஆங்கிலம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதற்கு முறையாக கற்றுக்கொடுக்குமாறும், கல்வியின் தரத்தை உயர்த்துமாறும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். பள்ளி வளாகத்தினை தூய்மையாக பராமரிக்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து மதுரை மாவட்ட பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலைக்குட்பட்ட ஏ.ஆர்.லைன் மாரியம்மன் கோவில்தெரு நியாயவிலைக் கடை எண். 1, 2 ஆகிய கடைகளை ஆய்வு செய்து அனைத்து பொருட்களும் முறையாக விநியோகிக்கப்படுகிறதா, பொருட்களின் அளவு சரியாக உள்ளதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அங்குள்ள பொருட்கள் விநியோகம் செய்யும் பதிவேட்டினை ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சுந்தரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திரு.ஜெய்சிங் ஞானதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்