முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் விதிமுறைமீறிய கட்டிடங்களுக்கு வைக்கப்பட்ட`சீல்' அகற்றப்படுமா?

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.- 22 - சென்னையில் விதிமுறைகளை மீறி பல கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கன்ஸ்யூமர் சிவிக் ஆக்ஷன் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் தொடர்ச்சியாக சென்னையில் பல கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. தியாகராயநகர் உட்பட சில இடங்களில் உள்ள 28 கடைகள், கட்டிடங்கள், விதிமுறை மீறி கட்டப்பட்டதாகக் கூறி, அவற்றுக்கு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) `சீல்' வைத்துவிட்டன.   இந்த நடவடிக்கையை எதிர்த்து, ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்கம், உஸ்மான்சாலை வியாபாரிகள் சங்கம் மற்றும் சில தனி கடைகள் சார்பில் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பல கடைகளின் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- ரங்கநாதன் தெருவில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் நாங்கள் பல ஆண்டுகளாக பழக்கடை, பழச்சாறு கடை போன்றவற்றை நடத்தி வருகிறோம். 50 ஆண்டுகளாக இந்தக் கட்டிடம் இயங்கி வருகிறது. விதிமுறைகளை மீறி கட்டியதாக அந்தத் தெருவில் உள்ள பல கடைகளுக்கு சென்னை மாநகராட்சி கடந்த 28.10.11 அன்று `சீல்' வைத்து மூடியது. அதோடு நாங்கள் கடை நடத்தும் கட்டிடமும் `சீல்' வைத்து மூடப்பட்டது. இதற்கு கட்டிட உரிமையாளர் பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எங்களை வெளியேற்றும் நோக்கத்தில் மாநகராட்சி நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இந்த கட்டிடத்துக்கு `சீல்' வைத்தது சட்டவிரோதமாகும். எனவே `சீல்' வைத்ததை அகற்ற உத்தரவிட வேண்டும். கடந்த 1 1/2 மாத காலமாக வியாபாரம் இன்றி செயல்படாத நிலையில் உள்ளது. பண்டிகை காலத்தில் எங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. வியாபாரம் இன்றி தொழில்நஷ்டம் ஏற்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக சிவில் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீnullதிபதி எம்.ஒய்.இக்பால், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில் உச்சநீதிமன்ற மூத்த வக்கீல்கள் அல்டாப் அகமது, ரவிசங்கர பிரசாத், அரிமா சுந்தரம் மற்றும் ஆர்.காந்தி, பி.எஸ்.ராமன், ஜி.ராஜகோபாலன் ஆகியோர் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட nullதிபதிகள், இந்த வழக்குகள் தொடர்பான தீர்ப்பை தேதி அறிவிப்பின்றி தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்