முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் வரம்பிற்குள் பிரதமர்: அ.தி.மு.க. எதிர்ப்பு

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,டிச.23 - புதிய லோக்பால் மசோதா வரம்பிற்குள் பிரதமரை கொண்டுவர அ.தி.மு.க.கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற லோக்சபையில் ஊழலை ஒழிக்கும் லோக்பால் மசோதா ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டது. அது உப்பு சப்பற்றது. அதனால் திருத்தங்களுடன் புதிய லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அண்ணா ஹசாரே குழுவினர் கோரினர். அதன்படி திருத்தப்பட்ட புதிய லோக்பால் மசோதா நேற்று லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த புதிய லோக்பால் மசோதா வரம்பிற்குள் பிரதமர் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்று தம்பித்துரை எம்.பி. பேசும்போது கூறினார். லோக்பால் வரம்பிற்குள் பிரதமரை கொண்டு ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க. கடுமையாக எதிர்த்து வருகிறது. அதேமாதிரி மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்க கோருவதையும் அ.தி.மு.க. எதிர்த்து வருகிறது. லோக் ஆயுக்தா அமைப்பது மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடுவதுமாதிரியாகும் என்றும் தம்பித்துரை கூறினார். அதேமாதிரி உணவு பாதுகாப்பு மசோதாவுக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதனால் ஏழை மக்கள் பயன்படப்போவதில்லை என்றும் தம்பித்துரை மேலும் கூறினார். உணவு பாதுகாப்பு மசோதாவும் நேற்று லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. லோக்பால் கமிட்டியில் சிறுபான்மையினர்களுக்கும் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதாதளம், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் ராஜ்யசபையில் இன்று லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்