முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்கொலை செய்து கொண்டவர் குடும்பத்தாருக்கு நிதி

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

தேனி, டிச. 23 - முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து தே.மு.தி.க. தலைமை கழக பேச்சாளர் தற்கொலை செய்து கொண்டார். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு நிதியுதவியை வழங்கிடுமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் ரூ. ஒரு லட்சத்திற்கான நிதியை குடும்பத்தாரிடம் வழங்கி தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மலரஞ்சலி செலுத்தினார். தேனி அருகே உள்ள சீலையம்பட்டியை சேர்ந்த தம்புராஜ், சீனியம்மாள் ஆகியோரது மகன் சேகர். இவர் தே.மு.தி.க. தலைமை கழக பேச்சாளராக இருந்தார். கட்சியில் தீவிர பற்றுக் கொண்ட இவர் கடுமையாக தேர்தல் பணியாற்றினார். இந்த நிலையில் முல்லைப் பெரியாறு பிரச்சினை காரணமாக இவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட சேகருக்கு மேனகா என்ற மனைவியும், 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 

இவரது மறைவு குறித்து தகவலறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சேகரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக நிதியுதவி வழங்கிடுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து சீலையம்பட்டிக்கு விரைந்து சென்ற நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அங்கு வைக்கப்பட்டிருந்த சேகரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தாருக்கு ரூ. ஒரு லட்சம் நிதியை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் எம்.எல்.ஏ கணேசன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சையதுகான், மாவட்ட செயலாளர் சிவகுமார், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, நகர செயலாளர் கூடலூர் சோலைராஜூ, உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் தீபாவளி ராஜூ, ஸ்டார் ரபீக், காதர் மீரான், கம்பம் நகர செயலாளர் நாகராஜ், ஆண்டிபட்டி ஒன்றிய குழு தலைவர் ரமாபீவிராஜாங்கம், கோட்டூர் பெருமாள், மாவட்ட பொருளாளர் சின்னகாளை, ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணசாமி, தேனி நகர செயலாளர் முருகேசன், தே.மு.தி.க. கொடுவை சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு சேகரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago