முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதாவிற்கு ஆதரவு கிடையாது: மாயாவதி

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

லக்னோ. டிச. 23 - லோக்பால் மசோதாவுக்கு தநனது பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்காது என்று உ.பி.முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தர பிரதேச மாநில முதல்வருமான மாயாவதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையை உ.பி. செய்தி துறை செயலாளர்   பிரசாந்த் திரிவேதி நேற்று செய்தியாளர்களிடம் வாசித்து காட்டினார்.

லோக்பால் வரம்பிற்குள் மத்திய புலனாய்வு துறையை 0 சி.பி.ஐ.யை) கொண்டு வராததால்  அந்த மசோதாவுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவு இல்லை என்று அந்த அறிக்கையில் மாயாவதி கூறியிருக்கிறார்.

வலுவான லோக்பால் மசோதாதான் வேண்டும் அதன் வரம்பிற்குள் சி.பி.ஐ,.ஐயும் கொண்டு வர வேண்டும் என்றுதான் தங்களது கட்சி மத்திய அரசுக்கு .யோசனை தெரிவித்திருந்தது. ஆனால் அந்த யோசனை உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மாயாவதி கூறியுள்ளார்.

தனது அரசியல் நோக்கத்திற்காக சி.பி.ஐ.யை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதற்கு கணக்கற்ற உதாரணங்கள் உள்ளன என்றும் இதில் தங்களது கட்சியே ஒரு பலிகாடாவானது எனறும் மாயாவதி தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

லோக்பால் வரம்பிற்குள் பிரதமர் பதவியையும் கொண்டு வர வேண்டும் என்பதையே தனது கட்சி  வலியுறுத்தி வருகிறது . இதோ போல இந்த சட்ட வரம்பிற்குள் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களையும் சேர்க்க வேண்டும்.மேலும் லோக்பால் அமைப்பில் தாழ்த்தப்பட்ட , பழங்குடியின மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர்  தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் பெரும்பான்மை மக்களிடையே காணப்படும் சாதி மனப்பான்மை காணமாக அதிகம் பாதிக்கப்படுவது இந்த சிறுபான்மை இன மக்கள்தான் எனவே லோக்பால் அமைப்புகளில் சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் மாயாவதி அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis