Idhayam Matrimony

நெப்போலியன் அதிகார துஷ்பிரயோகம்: உரிய நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.23 - மத்திய அமைச்சர்கள் அழகிரி, நெப்போலியன் ஆகியோர் வீடுகள் உள்ள பகுதியில் கால்வாய்களை தூர்த்து மூடி சாலையை அகலப்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்தது தொடர்பான முறைகேடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்து உள்ளார். இதுபற்றி விபரம் வருமாறு

சென்னை மாநகராட்சியின் சாதாரண முறையிலான கூட்டம் நேற்று காலையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் கந்தன் கவனஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். கோட்டூர்புரம் ரிவர்வியூ சாலை பகுதியில் மத்திய அமைச்சர்கள் அழகிரி, நெப்போலியன் மற்றும் முன்னாள் தமிழக அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருக்கு சொந்தமான வீடு இருப்பதால் அந்த பகுதியிலிருந்த கால்வாயை மூடி 20 அடி சாலையாக இருந்த சாலையை 60 அடி சாலையாக அகலப்படுத்தி பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? அந்த கால்வாய் மீண்டும் அகலப்படுத்தப்படுமா? என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:கோட்டூர்புரம் ரிவர்வியூ சாலைப்பகுதி குறித்து ஆய்வு செய்தபோது  பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. மக்களுக்கு பாதகமான செயலில் முந்தைய திமுக அரசும் அப்போதைய மாநகராட்சி நிர்வாகமும் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதல் அப்போதைய மேயர் வரையிலும் பல்வேறு சட்ட விதி மீறல்களை செய்து மக்களுக்கும் துரோகம் இழைத்துள்ளனர்.  இந்த சாலைப் பகுதியில் உள்ள கால்வாயில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்று முந்தைய எம்ஜிஆர் அரசும்  அதற்கு பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசும் கால்வாயை செப்பனிட்டு அதன் கரைகளை பலப்படுத்தி வைத்திருந்தனர். ஆனால் திமுக ஆட்சியில் இந்த கால்வாயின் பெரும் பகுதியை தூர்த்து பல்வேறு விதி மீறல்களுடன் சாலையை அகலப்படுத்தி இருக்கிறார்கள்.

தனி நபர்களின் ஆதாயத்திற்காக இத்தகைய செயலில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த சாலையில் 9 வீடுகள் மட்டுமே உள்ளது. இதற்கென தனியாக nullங்கா அமைக்கும் பணியிலும் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன.  இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த திட்டப் பணிகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து மாநகராட்சி மன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு மேயர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்