முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாக். வீரர்கள் போர் நிறுத்த மீறல்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஜம்மு,டிச.23 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டு வருகின்றனர். குளிர்காலம் வந்துவிட்டாலே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடும் குளிர் நிலவும். எங்கு பார்த்தாலும் பனிக்கட்டிகள் கிடக்கும். இதனால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். மேலும் எல்லையையொட்டி இந்திய காவல் முகாம்களில் இருக்கும் நமது ராணுவத்தினரும் கடும் குளிரில் இருப்பார்கள். இதை பயன்படுத்தி தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் பாதுகாப்பு கொடுத்து அவர்களை இந்திய எல்லைக்குள் ஊடுருவச் செய்வார்கள். இந்த செயல் இந்திய ராணுவத்தினர்களுக்கு தெரிந்துவிட்டது. அதனால் மைனஸ் 20 டிகிரி குளிராக இருந்தாலும் சரி, இந்திய ராணுவ வீரர்கள் உஷாராக இருக்க தொடங்கிவிட்டனர். இதனால் தீவிரவாதிகள் ஊடுருவ முடியவில்லை. அதனால் ராணுவத்தினர் வேண்டுமென்றே போர் நிறுத்த மீறலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய முகாம்கள் மீது துப்பாக்கியால் சுடுவது போல் சுடுவது. இல்லாவிட்டால் குண்டுகளை வீசி எறிவது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள். இதை பார்த்து இந்திய ராணுவத்தினரின் கவனம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பக்கம் திரும்பும். இதை பயன்படுத்தி தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி விடுவார்கள். இதே மாதிரி நேற்று பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து ஊடுருவச் செய்ய முயன்றனர். அப்போது இந்திய வீரர்கள் திருப்பிச் சுட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்தியா காவல் முகாம்களான தகு,கெளதோ மற்றும் யெல்லோ பம்ப் ஆகியவைகள் மீது சுமார் 800 தடவை சுட்டனர் என்று ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் இருபிரிவினர்களுக்குமிடையே சுமார் 2 மணி நேரம் சண்டை நடந்தது. பாகிஸ்தானின் இந்த செயல் போர்நிறுத்த மீறலாகும் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis