முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மையினர்களுக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீடு - மத்திய அரசு

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.- 25 - அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்விநிறுவனங்களில் சிறுபான்மையினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 சதவீத இடஒதுக்கீடு வருகின்ற ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் அமுல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 4.5 சதவீதம் சிறுபான்மையினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு வருகின்ற ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு கேபினட் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி 1992-ம் ஆண்டு சிறுபான்மையினர்களுக்கான தேசிய கமிஷனின் சட்டப்பிரிவு 2- ன் சி பிரிவில் கூறப்பட்டிருப்பது படியும் கடந்த 8-9-93-ம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக சிறுபான்மையினர்கள் வகுப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு 4.5 சதவீத இடஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர்களுக்கான தேசிய கமிஷன் சட்டம் 1992-ம் ஆண்டின்படி முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்தமதத்தினர், ஜொராஸ்டியன்ஸ் ஆகிய வகுப்புகளை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினர்களாக கருதப்படுவார்கள். இதன் மூலம் அவர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியுள்ளது. உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தலையுட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis