முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியாவின் வேண்டுகோளை ஏற்க பாக்.மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

இஸ்லாமாபாத்.மார்ச்.- 14.- மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான்  தீவிரவாதிகள் சிலரிடம் விசைரணை நடத்த இந்திய விசாரணை குழுவை அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் வேண்டுகோளை ஏற்க பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் மறுத்து விட்டனர். மும்பையில் கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம்  தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்டட்னர். இந்த 10 தீவிரவாதிகளில் 9 பேர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற ஒரே ஒரு  தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான். அவனுக்கு மும்பை சிறப்பு கோர்ட்டு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.
அஜ்மல் கசாப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மும்பை தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள பல முக்கிய தீவிரவாத தலைவர்களுக்கும் பங்கு இருக்கிறது என்பது தெரியவந்தது.  இதை அடுத்து அந்த முக்கிய தீவிரவாத தலைவர்கள் சிலர் ஒப்புக்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய லஸ்கர் இ தோய்பா தளபதி  ஜகியூர் ரெஸ்மான் லக்வி, மேலும் 6 தீவிரவாதிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்த இந்திய விசாரணை கமிஷன் குழு ஒன்றை பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்க அனுமதி தர வேண்டும் என்று பாகிஸ்தான் அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால் இந்தியாவின் இந்த வேண்டுகோளை ஏற்க பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 தீவிரவாதிகளிடமும் இந்திய விசாரணை குழுவினர் விசாரணை நடத்த அனுமதி அளிப்பதற்கு பாகிஸ்தான்  சட்டத்தில்  இடமில்லை என்வே இந்திய குழுவினரை அனுமதிக்க முடியாது என்று பாகிஸ்தான் உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்