முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரேவை எய்ட்ஸ் கிருமி செலுத்தி கொல்ல சதியா?

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

மும்பை,டிச.- 26 - அண்ணா ஹசாரே மற்றும் அவரது குழுவினர்களை ஊசி மூலம் எய்ட்ஸ் நோய் செலுத்தி கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருப்பதாக செய்தி வெளியாகி இருப்பதை இந்திய எய்ட்ஸ் நோய் தடுப்பு அமைப்பு அடியோடு மறுத்துள்ளது. இது வெறும் வதந்திதான் என்று அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் ஐஸ்வர் எஸ்.கிலாடா தெரிவித்துள்ளார். ஊழலை ஒழிக்க பலமான லோக்பால் மசோதாவை கொண்டுவரக்கோரி அண்ணா ஹசாரே நாளை முதல் 3 நாட்களுக்கு மீண்டும் மும்பையில் உண்ணாவிரதம் இருக்கிறார். அதனையடுத்து சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துகிறார். இதை அவர் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கும் அவரது குழுவினர்களுக்கும் ஊசி மூலம் எய்ட்ஸ் நோய் கிருமியை செலுத்தி அவர்களை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக டெல்லி போலீசாருக்கு ஒரு ரகசிய கடிதம் வந்துள்ளது. அதில் அண்ணா ஹசாரேயும் அவரது குழுவினர்களும் ரொம்பவும் பிடிவாதமாக இருந்தால் அவர்களது உடல்களில் எய்ட்ஸ் நோய் கிருமியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 500 எய்ட்ஸ் நோய் கிருமி அடங்கிய ஊசிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அதை உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டவர்களில் 1000 பேருக்கு செலுத்தலாம் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லியில் பேச்சு பலமாக அடிபடுகிறது. பெரும்பாலான மக்களிடத்தில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வதந்தியை இந்திய எய்ட்ஸ் நோய் தடுப்பு அமைப்பு அடியோடு மறுத்துள்ளது. இந்த செய்தி வெறும் வதந்தியை அடிப்படையாக கொண்டது. உடம்புக்கு வெளியே எய்ட்ஸ் கிருமிகள் அதிக நேரம் உயிருடன் இருக்காது. அதனால் எய்ட்ஸ் நோய் கிருமியை பிரித்து எடுப்பது மிகவும் சிரமமானது. ரத்தம் உணர்த்தவுடன் எய்ட்ஸ் நோய் கிருமியும் இறந்துவிடும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony