முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழவேற்காட்டில் சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் பலி

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.- 26 - கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் பழவேற்காட்டில் படகு சவாரி செய்தபோது படகு கடலில் மூழ்கியதில் பலியானார்கள். இதில் 3 குழந்தைகள் மீட்கபக்பட்டுள்ளனர். சென்னையை அடுத்த புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் நாடார் (70). இவருடைய மனைவி ஜெபஜோதி (65) இவருக்கு ஜெபதுரை (45) கனகராஜ் (42), தங்கராஜ் 40) நவமணிஆசிர் (30) ஆகிய பிள்ளைகள் உள்ளனர். இதில் ஜெபதுரை தனது குடும்பத்தாருடன் சென்னை கே.கே.நகரை அடுத்த நெசப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர்கள் அனைவரும் கிருஸ்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள். நேற்று கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி அதை கொண்டாட முடிவெடுத்து பழவேற்காடு பகுதிக்கு வந்துள்ளனர். பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செல்வதற்காக அனைவரும் அங்குள்ள ஒரு நாட்டு படகில் சவாரி சென்றுள்ளனர். 10 பேர்கள் செல்லவேண்டிய படகில் 25 பேர் சென்றதாக கூறப்படுகிறது. படகை மீனவர் அன்சாரியும், அவரது மனைவியும் ஓட்டிச்சென்றுள்ளனர். படகில் புலிகாட் ஏரியிலிருந்து கடல் சேரும் முகத்துவாரத்திற்கு சென்று விட்டு திரும்பும்போது அலை அதிகம் ஆனதால் படகு கவிழ்ந்துள்ளது. இதனால் படகிலிருந்து அனைவரும் தண்ணீரில் விழுந்து மூழ்கி உள்ளனர்.
உடனே அருகிலிருந்து மீனவர்கள் நீர்ல் குதித்து மூழ்கியவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மூழ்கிய இடம் கடல் நீரில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ளதால் கடலில் மூழ்கியவர்களை காப்பாற்ற இயலவில்லை. இதில் படகில் பயணம் செய்த பயணிகள் படகை ஓட்டிய படகோட்டி, அவரது மனைவி உட்பட அனைவரும் நீரில் மூழ்கி கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். ஆனாலும் மீனவர்கள் போராடி 3 சிறுவர் சிறுமியரை மீட்டனர். மீதியுள்ளவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. மீட்கப்பட்ட சிறுவர், சிறுமியர் விபரம் வருமாறு:- பவுன்ராஜ் (12), பால்தினகரன் (8), இவர்கள் தந்தை ஜெபதுரை உடல் கிடைக்கவில்லை. கனகராஜ் சாமுவேல் (12) இவரது தந்தை டானியல் கடலில் மூழ்கிவிட்டார்.
சம்பவம் பற்றி அறிந்தவுடன் உடனடியாக திருப்பாலைவனம் ஆய்வாளர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பணிககளை முடுக்கி விட்டார்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்சட்டர்ஜி, வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபு, மாவட்ட கண்காணிப்பாளர் வனிதா ஆகியோரும் விரைந்து வந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு பொன்னேரி தீயணைப்பு துறையினர், டைவர்கள், அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் வரவழைக்கப்பட்டு மூழ்கியவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
படகு மூழ்கிய இடம் கடல் முகத்துவராத்தில் இருந்ததாலும், நேற்று கடலில் அலைகள் சீற்றம் காற்று அதிகம் இருந்ததாலும் தேடும் பணி சிரமத்துடன் நடைபெற்றது. இதில் 3 குழந்தைகள், 7 பெண்கள், 2 ஆண்கள் சடலம் கரை ஒதுங்கியது மீட்கப்பட்டது.
இந்த விபத்தில் 12 பேர் கடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் 10 பேர்கள் உடலை மீட்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடலில் மூழ்கி இறந்தவர்ள் யாரும் பாதுகாப்பு கவசம் அணியவில்லை என்பதும், படகில் அதிக ஆட்களை ஏற்றி சென்றதும் விபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மேலும் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் அலைகளில் வேகமும் காற்றும் அதிகமாக இருந்ததும், முகத்துவாரம் அருகே படகு சென்றதும் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு பொன்னேரி கோட்டாட்சியர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த விபத்து பற்றி கேள்விபட்டவுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்கள் பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி இருவரையும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணி உதவிகள் அளிக்கும்படி உத்தரவிட்டார்.
இந்த விபத்தில் மீட்கப்பட்ட சடலங்கள், பொன்னேரி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பட்டது. உயிருடன் மீட்கப்பட்டவர்களும் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தேவைப்பட்டால் சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கும் சிகிச்சைக்கும் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago