முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாட் இன மக்கள் போராட்டம் 7 வது நாளாக ரயில் சேவை பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

ஹிஸ்ஸார்.மார்ச்.- 14.- ஹிஸ்ஸார் மாவட்டத்தில் ஜாட் இன மக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தின் காரணமாக அம்மாவட்டத்தில் 7 வது நாளாக ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு மற்றும் மாநில அரசு வேலை வாய்ப்புக்களில் தங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதை போல 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜாட இன மக்கள் கடந்த ஒருவார காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஜாட் இன மக்கள் அதிகமாக வாழும் ஹிஸ்ஸால் மாவட்டத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த போராட்டத்தின் காரணமாக நேற்று ஹிஸ்ஸார் - ஜக்கால்,ஹிஸ்ஸார் - பிவானி, ஹிஸ்ஸார் - சதல்பூர் மார்க்கங்களில் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போனது.

இந்த வழித்தடங்களில் பெண்கள் உள்ளிட்ட ஜாட் இன மக்கள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று ஜாட் இன மக்களின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் ரயில்களில் அன்றாடம் பயணிக்கும் பயணிகள் பெரிதும் கஷ்டத்திற்கு உள்ளானார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்