முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரமருக்கு திட்டமிட்டபடி கருப்புகொடி கட்சி விழாவில் விஜயகாந்த் அறிவிப்பு

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.- 26 - பிரதமருக்கு திட்டமிட்டபடி கறுப்புக்கொடி காட்டுவேன் என்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் விஜயகாந்த் கூறியுள்ளனார்.​இது பற்றி விபரம் வருமாறு:-கோயம்பேடு தே.மு.தி.க. அலுவலகத்தில் நேற்று காலை கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி குழந்தைகளுக்கு ஊட்டி விட்டார். பின்னர் ஏழைகளுக்கு பிரியாணி வழங்கினார். விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:​ 2012-ம் வருடம் அனைவருக்கும் நல்ல வருடமாக அமைய எனது வாழ்த்துக்கள். எனக்கு எம்மதமும் சம்மதம். கிறிஸ்துமஸ் விழாவும் ரம்ஜான் பண்டிகையும், பொங்கல் விழாவும் கொண்டாடுவேன். மத்திய, மாநில அரசுகளின் செயல்பாட்டால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பால், பஸ் கட்டண உயர்வால் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்து மின்சார கட்டணத்தையும் உயர்த்தப்போகிறார்கள். மத்திய​, மாநில அரசுகள் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை. மீனவர் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைக்காக மக்கள் ரோட்டில் வந்து போராடும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி விளக்கம் தர மறுப்பதால் அங்கும் மக்கள் போராடுகிறார்கள். ஓட்டுப்போட்ட மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.   மக்கள் பிரச்சினையில் அக்கறை செலுத்தாத பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவேன் என நான் அறிவித்தேன். அதை குறை கூறுகிறார்கள். திட்டமிட்டப்படி பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவேன். 2012-​ம் ஆண்டு நல்ல ஆண்டாக அமைய மீண்டும் வாழ்த்துகிறேன். இவ்வாறு விஜயகாந்த் பேசினார். 

விழாவில் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் செந்தாமரைகண்ணன், யுவராஜ், வி.என்.ராஜன், எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, கு.நல்லதம்பி தலைமை கழக நிர்வாகிகள், வட்ட பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago