முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிவினைவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க கூடாது -இராமகோபாலன்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

திருச்செந்தூர், டிச.- 26 - பிரிவினைவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்று திருச்செந்தூரில் இராமகோபாலன் கூறினார். திருச்செந்தூரில் கே.டி.எம் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி மண்டல பொது குழு கூட்டம் நடந்தது. இதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கன்னியாகுமரி மாவட்ட தலைவர் செல்வம், நெல்லை மாநகர மாவட்ட தலைவர் பாலஜிகிருஷ்ணசாமி, தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் செல்வ சுந்தர், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தங்கவேலு, மேற்கு மாவட்ட தலைவர் பொன்னுசாமி, இந்து முன்னனி மாநில தலைவர் அரசுராஜா, துணை தலைவர் வி.பி.ஜெயகுமார், மாநில அமைப்பாளர்கள் முருகானந்தம், பொன்னையா, மாநில நிர்வாக குழு உறுப்பினர் மாயகூத்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராமகோபாலன் கலந்து கொண்டு பொது குழு வழிகாட்டி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இராமகோபாலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இன்று அணுமின் சக்தி, காலத்தின் கட்டாயம். அதேபோல் மக்களின் கவலையையும் அச்சத்தையும் போக்க வேண்டும். கூடன்குளம் அணுமின் நிலையம் மூலமாகத்தான் மின்சார தேவையை ஒரளவு ்டுகட்ட முடியும். இந்த அணு மின் நிலையத்தை இயங்க விடாமல் செய்ய வெளிநாட்டு சக்தி ்டுபட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது  என்பதை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும்-. கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை அவமதிக்கிறார்கள். அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து தேசிய பாதுபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். வேறு எந்த சக்தி மூலமாகவும் மின்சாரம் தயாரிப்பது மிக குறைவானது. நாட்டை சீர்குலைக்கும் தேச விரோத சக்திகளை உடனே கைது செய்ய வேண்டும். பிரிவினைவாதத்தை ஒரு போது அனுமதிக்க கூடாது. தேசிய ஒருமைப்பாட்டை நிலை நிறுத்த நதிநீர் இணைப்பு அவசியம். நாட்டின் இயற்கை வளங்களை தேசியமயமாக்க வேண்டும். மத்திய அரசு ஒரு சோம்பேரி அரசாக செயல்படுகிறது. எந்த ஒரு பிரச்சனையையும் தீர்ப்பதில் அக்கரை செலுத்துவதில்லை.முல்லை பெரியாறு பிரச்சனையை அரசியல் ஆக்க கூடாது. மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். முல்லை பெரியார் தண்ணீர் தமிழகத்திற்கு கண்டிப்பாக வேண்டும். இரு மாநிலங்களுக்கிடையே பொருளாதார தடை கூடாது இது அழிவை ஏற்படுத்தும். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அய்யப்ப பக்தர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்க கூடாது. அய்யப்பர் கேரளாவுக்கு மட்டும் சொந்தம் இல்லை, நாட்டிற்கே சொந்தம். இவ்வாறு கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்