முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் செல்வாக்கு பெற்ற ஒரே கட்சி காங்கிரஸ்தான் - அபிஷேக் சிங்வி

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டிச. - 26 - உத்தர பிரதேசத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்ற தேர்தல் கமிஷனின் அறிவிப்புக்கு காங்கிரஸ், பா.ஜ.க. சமாஜ்வாடி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. மேலும் தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்றும், தனித்து ஆட்சியை கைப்பற்றுவோம் என்றும் இக்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக்சிங்வி டெல்லியில் கூறுகையில், தேர்தல் கமிஷனின் அறிவிப்பை வரவேற்கிறோம். தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த தேர்தலில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் செல்வாக்கு பெற்ற ஒரே கட்சி காங்கிரஸ்தான் என்பதை நிரூபிப்போம் என்றார். இந்த தேர்தல் அறிவிப்பை வரவேற்ற பா.ஜ.க. முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங் கூறுகையில், இது போன்று 7 கட்டங்களாக தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதற்கு மாநிலத்தில் பகுஜன் சமாஜ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதே காரணம். தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும் என்றார். தேர்தல் அறிவிப்பு குறித்து லக்னோவில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் கூறுகையில், மாயாவதி தலைமையிலான ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை. பா.ஜ.க. வாக்குகளில் பெரும்பாலானவை கடந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு சென்று விட்டது. மோசமான ஆட்சியால் மக்களின் கோபத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆளாகியுள்ளது. மின்சாரம், குடிநீர், விவசாயிகள் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியே காரணமாகும். 2 ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் விளக்கி வருகிறோம். இந்த தேர்தலில் மக்கள் ஆதரவுடன் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஹசாரே நடத்தி வரும் போராட்டம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார் அபிஷேக்யாதவ்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்