முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழவேற்காடு படகுவிபத்து: உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.27 - பழவேற்காடு படகு விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 உடல்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் நேற்று ஒருநாள் கடை அடைப்பு நடத்தினர். 

பழவேற்காடு ஏரியில் நடந்த படகு விபத்தில் பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன. இந்த விபத்தில் பலியானவர்களின் ர்வீகம் நெல்லை மாவட்டம். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா இட்டமொழியை சேர்ந்தவர், தங்கப்பாண்டி நாடார். இவருடைய தம்பிகள் தங்கசாமி நாடார், சுந்தரபாண்டிய நாடார் (வயது 68). இவர்கள் குடும்பம் ஆரம்பத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தது. சுந்தரபாண்டிய நாடார் முதலில் பனை ஏறும் தொழில் செய்து வந்தார். அண்ணன்களுக்கு உதவியாக விவசாயமும் செய்தார். பின்னர் டெய்லர் கடை நடத்தினார். இவருடைய மனைவி பெயர் ஜெயமேரி. இவர்களுக்கு ஜெயதுரை, ஆசீர், கனகராஜ், தங்கராஜ் ஆகிய 4 மகன்கள். பாக்கியமணி என்ற ஒரே மகள். 5 குழந்தைகள் இருந்ததால் சுந்தரபாண்டிய நாடார் பிழைப்புக்கு மிகவும் சிரமப்பட்டார். இதனால் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி சென்னை சென்றார். சில ஆண்டுகள் கடை, ஓட்டல்களில் மாறி, மாறி வேலை செய்தார். பின்னர் கும்மிடிப்nullண்டியில் சொந்தமாக சிறிய ஓட்டல் ஒன்றை தொடங்கினார். குடும்பத்தினர் சேர்ந்து ஓட்டலை கவனித்து வந்தனர். அனைவரும் கடினமாக உழைத்து தொழிலில் மென்மேலும் வளர்ச்சி அடைந்தனர். சுந்தரபாண்டிய நாடாரின் மகன்கள், மகளுக்கு திருமணமாகி விட்டது. பேரன், பேத்திகளுடன் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக தற்போது வரை வசித்து வந்தனர். சுந்தரபாண்டிய நாடார் தனது குடும்பத்தினருடன் அவ்வப்போது சொந்த ஊரான இட்டமொழிக்கு வந்து செல்வார். முக்கிய குடும்ப விழாக்களுக்கு தவறாமல் வந்து விடுவார். ஆண்டுதோறும் தைப்பொங்கல் அன்று 2 பஸ்களில், சுந்தரபாண்டிய நாடாரின் குடும்பத்தினர் கும்மிடிப்nullண்டியில் இருந்து ஊருக்கு வருவார்கள். அப்போது தனது ஓட்டல்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், தொழிலாளர்களையும் கூடவே அழைத்து வருவார். இட்டமொழியில் உள்ள தங்களுடைய தோட்டத்துக்கு சென்று, அங்குள்ள தாய்​ தந்தையர் நினைவு இடத்தில் வழிபாடு நடத்துவார். ஆண்டு தோறும் பொங்கல் அன்று அன்னதானமும் வழங்கி வந்துள்ளனர். தற்போது சுந்தரபாண்டிய நாடார் அண்ணன் தங்கசாமி நாடாரின் மகள் வயிற்று பேரன் ஜேக்கப் செல்வன் திருமணம் வருகிற 29​ந் தேதி (வியாழக்கிழமை), திசையன்விளை நவ்வலடியை அடுத்த மரக்காட்டுவிளையில் நடைபெற உள்ளது. திருமண நிச்சயதார்த்தம் நடந்த அன்று சுந்தரபாண்டிய நாடார் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். திருமண விழாவுக்கு தன் குடும்பத்தினர் அனைவருடன் வருவதற்காக வருகிற 27​ந் தேதி டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார். இதற்கிடையே மணமகன் ஜேக்கப் செல்வன் நேற்று மதியம் ஒரு மணி அளவில், தாத்தா சுந்தரபாண்டிய நாடாருடன் போனில் பேசினார். அப்போது, திருமண ஏற்பாடுகள் எல்லாம் எப்படி நடக்கின்றன என்றும், நாங்கள் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட குடும்பத்தினருடன் பழவேற்காடு ஏரிக்கு சுற்றுலா வந்து இருக்கிறோம், என்றும் கூறி உள்ளார். அதன் பின்னர்தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. 

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பற்றி சில மணி நேரம் கழித்தே போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அமைச்சர்கள் ரமணா, வி.மூர்த்தி இருவரும் பழவேற்காடுக்கு சென்று மீட்பு பணியை தீவிரப்படுத்தினார்கள். 126 போலீசார், கடலோரக் காவல் படையினர், மற்றும் மீனவர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இன்று காலை வரை 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீதி 5 பேர் உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவர்களது உடல் ஏரியில் வேறு எந்த பகுதியிலாவது கரை ஒதுங்கி இருக்கலாம் என்று தேடப் பட்டு வருகிறது. இதற்கிடையே மீட்கப்பட்ட 17 பேர் உடல்களும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆசிஷ்சட்டர்ஜி, வடக்கு மண்டல காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, எஸ்.பி. வனிதா, டி.எஸ்.பி. குமார், வருவாய் கோட்டாட்சியர் கந்தசாமி, இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இன்று காலை முதல் பிரேத பரிசோதனை நடந்தது. சுந்தரபாண்டியனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து உடல்கள் கும்மிடிப்nullண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. முதலில் சுந்தரபாண்டியன், ஜெயஜோதி, சுந்தரமேரி, ரோஸ்லின் மேரி ஆகிய 4 பேர் உடல்கள் கும்மிடிப்nullண்டி கொண்டு செல்லப்பட்டன. பிறகு ஜான்சிசார்லஸ், மெர்லின், ஜூலியட் (5 மாத குழந்தை), ஜோஷ்வா ஆகிய 5 பேரின் உடல்கள் கும்மிடிப்nullண்டிக்கு எடுத்து செல்லப்பட்டது. கும்மிடிப்nullண்டி பைபாஸ் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் அவர்களது உடல்கள் வைக்கப்பட்டு இறுதி ஆராதனைகளும், சடங்குகளும் செய்யப்பட்டன. அதன் பிறகு உடல்கள் பைபாஸ் சாலையில் கோரிமேடு பகுதியில் உள்ள இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காக சென்னையில் இருந்து அமரர் ஊர்தி வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. கோரிமேடு இடுகாட்டில் ஜேசிபி எந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டிருந்தன. அங்கு சுந்தரபாண்டியன் மற்றும் அவர் குடும்பத்தினரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. சுந்தரபாண்டியன் குடும்பத்தினர் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கும்மிடிப்nullண்டியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. வியாபார பிரமுகர்கள் அனைவரும் கோரிமேடு இடுகாட்டுக்கு திரண்டு வந்து சுந்தரபாண்டியன் மற்றும் அவர் குடும்பத்தினர் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். சுந்தரபாண்டியனின் உறவினர்களும், பெண்களும் நூற்றுக்கணக்கில் கோரிமேடு இடுகாட்டுக்கு வந்திருந்தனர். பலியானவர்களின் உடல் களை பார்த்து அவர்கள் கதறியது மிகவும் பரிதாபமாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்