முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 11-ல் பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச. 27 - மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வரும் 11 ம் தேதியில் இருந்து பட்ஜெட் ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக மத்திய நிதியமைச்சர் ஆலோசனை கூட்டங்களை நடத்துவது வழக்கமாகும். தொழில்துறை தலைவர்கள், பொருளாதார அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகளை பட்ஜெட்டில் நிதியமைச்சர் பயன்படுத்திக் கொள்வார். இதன்படி அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படவுள்ள 2012 - 13 ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆலோசனை கூட்டங்கள் வரும் 11 ம் தேதி தொடங்குகிறது. முதல் கூட்டத்தில் வேளாண்துறை நிபுணர்களுடன் நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவார். இதன் தொடர்ச்சியாக வரும் 13 மற்றும் 16 ம் தேதிகளில் தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொழில்துறை சங்கத்தினருடனும் ஆலோசனை நடைபெறுகிறது. 

இந்திய பொருளாதாரத்துக்கு இந்த நிதியாண்டு கடினமானதாக அமைந்து விட்டது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக குறைந்து விட்டது. இது கடந்த 9 காலாண்டுகளிலேயே மிக குறைந்த வளர்ச்சியாகும். இதனுடன் தொழில்துறை உற்பத்தி 5.3 சதவீதமாக குறைந்து பங்கு சந்தையில் நிலையற்ற தன்மை ஆகியன இந்திய பொருளாதாரத்தை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன. 

சமூக துறைகளை சார்ந்தவர்களை நிதியமைச்சர் வரும் 17 ம் தேதி சந்திப்பார். நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் முதன்மை செயல் அலுவலர்களை நிதியமைச்சர் வரும் 19 ம் தேதி சந்திப்பார். பொருளாதார வல்லுனர்களுடன் வரும் 20 ம் தேதி நடைபெறும் சந்திப்போடு நிதியமைச்சரின் பட்ஜெட் ஆலோசனை கூட்டம் முடிவடைகிறது. கொள்கை முன்னெடுப்புகள், தொழில்துறை உற்பத்தியின் மந்தநிலை, அதிகரித்து வரும் நிதி பற்றாக்குறை ஆகியன குறித்து விரிவான ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது. இதனுடன் சரக்கு மற்றும் சேவை வரி நேரடி வரி விதிப்பு தொகுப்பு உள்ளிட்ட வரி சீர்திருத்த திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்