முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாஜ்பாய்க்கு வயது 88: பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச. 27 - பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய்க்கு 88 வது பிறந்த நாளையொட்டி பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங் அவரின் இல்லத்துக்கு சென்று பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பா.ஜ.க. வின் மூத்த தலைவர்களான அத்வானி, ராஜ்நாத்சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

அவரது பிறந்த நாளை நல்ல ஆட்சிக்குரிய நாளாக கொண்டாடப்படுவதாக பா.ஜ.க தலைவர் கட்காரி தெரிவித்தார். அவரது ஆட்சிக் காலத்தின் சிறந்த நிர்வாகத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார். மக்களவை துணை தலைவர் கரிய முண்டா, உத்தரகாண்ட் முதல்வர் கந்தூரி, பீகார் துணை முதல்வர் சுசில் மோடி, பா.ஜ.க தலைவர் நஜ்மா ஹெப்துல்லா, பா.ஜ.க  செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவுடேகர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis