முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்ணாவிரத போராட்டம்: ஹசாரேவுக்கு வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.27 - உண்ணாவிரத போராட்டத்தை துவக்குவதற்கு முன்பாக பாராளுமன்ற விவாதத்தின் முடிவு தெரியும் வரை காத்திருக்குமாறு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வலுவான லோக்பால் மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே போராடி வருகிறார். இந்தநிலையில் சமீபத்தில் பாராளுமன்ற லோக்சபையில் புதிய லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் இன்று லோக்சபையில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த மசோதா வலிமையானதாக இல்லை என்று கூறி அண்ணா ஹசாரே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் இன்றுமுதல் 3 நாள் உண்ணாவிரதப்போராட்டத்தை துவக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையில் டெல்லியில் நேற்று பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா ஹசாரே தனது உண்ணாவிரதப்போராட்டத்தை துவக்கும் முன்பாக பாராளுமன்றத்தில் நடக்கும் விவாதத்தின் முடிவு தெரியும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். தற்போது அது பாராளுமன்றத்தின் கையில் உள்ளது. எனவே அதன் முடிவுக்கே விட்டுவிட வேண்டும். இந்த மசோதா லோக்சபையில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இது ஒரு வலிமையான, உறுதியான மசோதா. எனவே பாராளுமன்றத்தின் முடிவுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். பாராளுமன்றம்தான் அதன் முடிவை நிர்ணயம் செய்யும். எனவே அந்த முடிவு தெரியும் வரை காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் ஹசாரேவுக்கு அதிக பொறுமை வேண்டும். அவரது உடல் ஆரோக்கியத்திற்கு நான் வாழ்த்து கூறுகிறேன். அதேநேரம் பாராளுமன்ற முடிவு தெரிந்த பிறகு அவர் எதையும் செய்யட்டும். பாரதிய ஜனதா கட்சியினரோ அவருக்கு ஆதரவாக பேசுகிறார்கள். இது ஏன் என்று புரியவில்லை. பா.ஜ.க, மற்றும் ஆர்.எஸ். எஸ். கருத்துக்களை ஹசாரே பிரதிபலிக்கிறாரா? அவர்களோடு தொடர்பு இல்லை என்று அவரால் கூறமுடியுமா? இவ்வாறு ராஜீவ் சுக்லா தெரிவித்தார். இதே கருத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்