முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குப் பதிவின் போது மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்: பிரவீண்குமார்

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை,மார்ச்.- 14 - வாக்குப் பதிவின் போது வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில் சட்டப் பேரவை தேர்தலில் சுமார் 10 ஆயிரம் வாக்குச் சாவடிகளஇல் வீடியோ கேமிரா பொருத்தப்படுகிறது. இதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வாக்காளர்களை மிரட்டுவதாக தகவல்கள் வந்துள்ளன. நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பது கேமிராவில் பதிவாகி விடும் என்றும் எனவே மாற்றுக் கட்சிக்கு வாக்களித்தால் அது தெரியும் என்றும் அவர்கள் மிரட்டுவதாக தெரிகிறது.
அது போன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது கேமிராவிலும் பதிவாகாது. கேமிரா ஓரிடத்திலும், வாக்களிக்கும் இடம் வேறு பகுதியிலும் இருக்கும். எனவே மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!