முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பாலுக்கு பார்லி.தான் இறுதி வடிவம் கொடுக்கும்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

கொல்கத்தா,டிச.27 - லோக்பால் மசோதாவுக்கு பாராளுமன்றம்தான் இறுதி வடிவம் கொடுக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது மீது இன்று லோக்சபையில் விவாதம் நடக்கவிருக்கிறது. இந்தநிலையில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த புதிய லோக்பால் மசோதாவிலும் திருத்தம் செய்ய வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்கள் அண்ணா ஹசாரே மும்பையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். 

இந்தநிலையில் கொல்கத்தா வந்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, லோக்பால் மசோதா எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதை பாராளுமன்றம்தான் இறுதி முடிவு செய்யும் என்றார். பாராளுமன்றம்தான் சட்டத்தை இயற்றும். இது பாராளுமன்றத்தின் வேலையாகும். லோக்பால் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அது குறித்து அண்ணா ஹசாரே மற்றும் அவரது குழுவினர்களுடன் மத்திய அமைச்சர்கள், பிரதிநிதிகள் பலமுறை சந்தித்து பேசினர். அவர்களுடைய கருத்துக்களும் எங்களுக்கு தெரியும். கருத்து ஒற்றுமை ஏற்படுவதற்கு அவர்களுடன் 9 முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். மேலும் மத்தியஸ்தர்களும் அவர்களை சந்தித்து பேசினர் என்று பிரணாப் கூறினார். லோக்பால் மசோதா மீது இன்று பாராளுமன்ற லோக்சபையில் விவாதம் தொடங்குகிறது. அதேசமயத்தில் ஹசாரேவும் இந்த மசோதாவுக்கு எதிராக உண்ணாவிரதத்தை மீண்டும் இன்று துவக்கிறார். இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டதற்கு லோக்பால் மசோதாவுக்கு இறுதி வடிவும் கொடுப்பது குறித்து பாராளுமன்றம்தான் முடிவு செய்யும் என்று முகர்ஜி சுருக்கமாக பதில் அளித்தார். பாராளுமன்ற விவாதத்திற்காக மசோதாவை தாக்கல் செய்துவிட்டோம். உறுப்பினர்கள் விவாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து நான் முன்கூட்டியே கூறுவது சரியாக இருக்காது. இதுகுறித்து பின்னர் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள் என்று பிரணாப் முகர்ஜி மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago