முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: 2 பேர் கைது

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச.28 -  பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி செல்லும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நேற்று முன்தினம் திருச்சி விமானநிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில் அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் பகல் 1 மணியளவில் பல்லாவரம் போலீஸ் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.வெடிகுண்டு நிபுணர்கள் திருச்சி விமானநிலையத்தில் நின்ற பிரதமரின் சிறப்பு விமானத்தை சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் வோடபோன் எண்ணிலிருந்து வந்தது தெரியவந்தது. அயனாவரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அந்த எண்ணுக்குரிய சிம் கார்டை வாங்கியிருந்தார்.அயனாவரத்தில் விசாரித்தபோது அவர் 2 மாதங்களுக்கு முன்பே வீட்டை காலி செய்து ந்தமல்லியில் குடியேறியிருந்தார். ந்தமல்லியில் அவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் கூறும்போது, தனது செல்போனை மாமியார் உபயோகத்துக்கு கொடுத்ததாகவும் அவர் இறந்து விட்டதால் தனது பெரியப்பா மகன் பாபு பயன்படுத்தி வந்ததாகவும், குடிபோதையில் அவன் செல்போனை தூக்கி வீசி விட்டதாகவும் கூறினார்.

பின்னர் அந்த செல்போன் ந்தமல்லியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் உபயோகித்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis