முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் வரம்புக்குள் சி.பி.ஐ. இல்லை: பிரதமர்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,டிச. 29 - லோக்பால் வரம்புக்குள் மத்திய புலனாய்வு அமைப்பு கொண்டு வரப்படாது என்று பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக தெரிவித்தார். மக்களவையில் நடைபெற்ற லோக்பால், லோக்ஆயுக்தா மசோதா தொடர்பான விவாதத்தின் போது பிரதமர் பேசியதாவது, ஒவ்வொரு தேசத்தின் வரலாற்றிலும் ஒரு சிறப்பான தருணங்கள் இருக்கும். நமது தேசத்தின் வரலாற்றில் இது ஒரு சிறப்பான தருணம். மசோதா தொடர்பான விவாதத்துக்கு பின் நடைபெறும் வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் விவேகம் எப்படி வெளிப்படப் போகிறது என்பதை தேசமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அரசின் தலையீடு இல்லாமல் சி.பி.ஐ அமைப்பு சுதந்திரமாக செயல்பட வேண்டும். லோக்பால் வரம்புக்குள் சி.பி.ஐ.யை கொண்டு வந்தால் யாருக்கும் பதில் சொல்ல கடமைப்படாத வகையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்கியதாக ஆகி விடும். சி.பி.ஐ. லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவது அரசியலமைப்பு கொள்கைகளுக்கு எதிரானதாகும் என்றார். 

இந்த மசோதாவை வடிவமைக்கும் முன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளோம்.பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களும், பல்வேறு அமைப்புகளின் கருத்துக்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஜனநாயகத்தில் மக்களின் வாக்கு சக்திதான் மகத்தானது. விவேகத்திற்கு பதிலாக உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்தால் அது ஜனநாயகத்திற்கு விடை கொடுத்து குழப்பத்தில் போய் முடியும். சிறப்பான எதிர்காலத்திற்கான ஒன்றை உருவாக்கி உள்ளோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் மாநில அரசுதான் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவேதான் லோக் ஆயுக்தா வரம்புக்குள் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். லோக் ஆயுக்தா நிறுவப்படவில்லை என்றால் ஊழல் என்ற புற்றுநோய் வேகமாக பரவும். லோக்பால் அமைப்புடன் மாநிலங்களில் லோக் ஆயுக்தாவும் உருவாக்கப்படும் என நாடாளுமன்றத்தில் உறுதி அளித்துள்ளோம். அவ்வாறு அமைக்கப்படவில்லை எனில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறியவர்களாவோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்