முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 20 பேர் பலி

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், டிச.29 - காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவத்தினர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் இம்மாநிலத்தில் பனியினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.  காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கடுமையான பனிப்பொழிவும் கன மழையும் பெய்து வருகிறது.  இதனால் பல இடங்களில் பனிச்சரிவும், நிலச்சரிவும் ஏற்பட்டு வருகின்றன. 

இந்த சம்பவங்களில் இது வரை 18 பேர் பரிதாபமாக பலியானார்கள்.  நேற்று குப்வாரா மாவட்டம் தங்தார் என்ற இடத்தில் ராணுவ முகாம் ஒன்றின் மீது பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த முகாம் பனிக்கட்டிகளால் மூடப்பட்டது.

இந்த பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். மேலும்10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை பனியினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 

கடும் மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

இயற்கை சீற்றங்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சரிப்படுத்த மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் முழு வீச்சில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்