முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் அம்சங்கள்: அதிருப்தியில் கூட்டணி கட்சியினர்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, டிச. 29 - லோக்பால் மசோதாவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். லோக்பால் மசோதா தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கூறுகையில், 

மாநிலங்களில் லோக்ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை லோக்பால் மசோதா கட்டாயமாக்குகிறது. இது மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. மேலும் மாநில சட்டப் பேரவைகளின் சட்டம் இயற்றும் உரிமையை குறைத்து மதிப்பிடுவதாகவும் உள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றினால் நாட்டின் உயர் விசாரணை அமைப்பாக லோக்பால் மாறி விடும். லோக்பால் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபடும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார். 

தி.மு.க.வை சேர்ந்த இளங்கோவன் கூறுகையில், மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். லோக் ஆயுக்தா தொடர்பாக சட்டம் இயற்றும் உரிமை மாநில அரசுகளிடம்தான் இருக்க வேண்டும் என்றார். இதே போல் தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளன. ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு கூறுகையில், நேர்மையாளரான பிரதமரையே லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக நியமித்து விடலாம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்