முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜன 5-ல் இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் ஆணையம்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.30 -  தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 1.1.2012 தேதியை தகுதி நாளாக கெண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் 1.1.2012 அன்று 18 வயது நிரம்பியவர்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பித்தனர்.

இதற்காக அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்களின் நலன் கருதி விடுமுறை நாளான ஞாயிற்று கிழமைகளில் அந்தந்த வாக்கு சவாடிகளில் சிறப்பு முகாம் நடந்தது. தாலுகா அலுவலகங்களிலும் பெயர் சேர்க்க மனு அளித்தனர். நவ 8-ம் தேதி வரை பெயர் சேர்க்க மனுக்கள் பெறப்பட்டன. வட மாவட்டங்களில் மழை, வெள்ளம் காரணமாக வாக்காளர் பெயர் சேர்க்க நவ 11-ம் தேதி வரை கூடுதலாக மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. 

இவ்வாறு பெறப்பட்ட வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான மனுக்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வாக்குசாவடி நிலை அலுவலர் மூலம் வீடு வீடாக சென்று 100 சதவீதம் விசாரணை செய்யப்பட்டது. விசாரணை முடிந்த பின்னர் அந்தந்த தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்காளர் பெயர் சேர்ப்பது தொடர்பாக இறுதி ஆணை பிறப்பித்தனர். இதையொட்டி ஜன. 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. இதை தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்