முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை செல்கிறார்

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச.30 - வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஜனவரி மாதம் இலங்கை செல்கிறார். அப்போது தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி பேசுவார் என்று கூறப்படுகிறது. இலங்கை போர் முடிவடைந்து 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்கப்படவில்லை. அரசியல் அமைப்பு சட்ட 13 வது திருத்தத்தின் படி கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்று அதிபர் ராஜபக்சே உறுதியளித்தார். அதை காற்றில் பறக்க விட்டு விட்டார். தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டது. இவர்களுக்கும் தமிழர் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையே 16 சுற்று பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து விட்டன. இதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஏனென்றால் போலீஸ் அதிகாரம் மற்றும் நில அதிகாரம் ஆகியவற்றை தமிழர்களுக்கு விட்டு கொடுக்க முடியாது என்று அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக அறிவித்து விட்டார். 

இதை ஏற்க முடியாது என்று தமிழர் பிரதிநிதிகள் கூறி விட்டனர். ஏனென்றால் தமிழர் பகுதிகள் அனைத்திலும் சிங்கள போலீசாரே தொடர்ந்து நிலை பெற்றிருப்பார்கள். இதனால் பேச்சுவார்த்தை முறியும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஜனவரி மத்திய வாக்கில் இலங்கைக்கு செல்கிறார். அவர் அதிபர் ராஜபக்சேவையும், தமிழர் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவின் சார்பில் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று அறிவித்ததையடுத்து ஏற்பட்ட பின்னடைவுகளையும் அவர் பார்வையிடுவார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்