முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் தலைமையில் காங். தலைவர்கள் ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச.30 - ராஜ்யசபையில் நேற்று லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் ராஜ்யசபையில் தொடங்குவதற்கு சற்று முன்பாக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பவன்குமார் பன்சால், கபில்சிபல், வி. நாராயணசாமி மற்றும் சல்மான் குர்ஷித் போன்ற மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். லோக்பால் மசோதா கடந்த செவ்வாயன்று பாராளுமன்ற லோக்சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா ராஜ்யசபையிலும் நிறைவேறும் என்று பிரதமர் மன்மோகன்சிங் நம்பிக்கை தெரிவித்தார். 

இந்நிலையில் நேற்று ராஜ்யசபையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ராஜ்யசபையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மசோதாவை நிறைவேற்றும் வகையில் போதுமான மெஜாரிட்டி இல்லை. மசோதாவை நிறைவேற்ற மற்ற கட்சிகளை சேர்ந்த 21 எம்.பிக்களின் ஆதரவு அரசுக்கு தேவை. இதையடுத்து பா.ஜ.க.வின் ஆதரவை பெற மத்திய அரசு முயற்சி செய்தது. இந்த நிலையில்தான் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூடி அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். மசோதா ராஜ்யசபையில் நிறைவேறும் என்று இவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். 

முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் மசோதாவை நிறைவேற்றும் விஷயத்தில் கட்சியின் யுக்தி பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு பாராளுமன்ற ராஜ்யசபையில் லோக்பால் மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்