முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூளைக் காய்ச்சலை தடுக்க மத்திய அரசு தவறி விட்டது

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.30 - உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பரவிவரும் மூளைக்காய்ச்சலை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று லோக் சபையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில்  மூளைக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. பாராளுமன்றத்தின் லோக் சபையில் நேற்று மூளைக்காய்ச்சல் நோய் குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இந்த மூளைக்காய்ச்சல் நோயை தடுக்க மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.

இந்த காய்ச்சலை தடுக்க தேவையான தடுப்பு மருந்துகள்,  டாக்டர்கள், மருத்துவமனைகள்,  பாதுகாப்பான குடிநீர்  ஆகியவற்றுக்கு  மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக இந்நோய்க்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர் என்றும்   கட்சி பாகுபாடின்றி கிட்டத்தட்ட எல்லா கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்கள்  குரல் கொடுத்தனர்.

மூளைக்காய்ச்சலால் கோரக்பூர் மாவட்டம்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும்,  ஆனால் இந்த நோயை தடுக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கோரக்பூர் பா.ஜ.க. எம்.பி.  யோகி ஆத்தியாநாத் கூறினார்.

பா.ஜ.க. மட்டுமல்லாமல்,   சமாஜ்வாடி,  காங்கிரஸ் கட்சிகளைச்  சேர்ந்த எம்.பி.க்களும் மூளைக்காய்ச்சல் நோயினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கள்,   பாதிப்புக்கள் குறித்து  எடுத்துக் கூறினர்.பிறகு மத்திய  சுகாதார அமைச்சரின் பதிலுக்கு  பிறகு இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்