முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக் ஆயுக்தா அமைக்க கட்டாயப்படுத்த கூடாது

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, டிச.30 - மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. மாநிலங்களவையில் லோக்பால் மசோதா வரும் போது லோக் ஆயுக்தா தொடர்பான பிரிவில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இதனால் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரசின் ஆதரவை பெறுவதில் மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மத்திய கப்பல் துறை இணையமைச்சர் முகுல்ராயுடன் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர் டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் முகுல்ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

லோக்பால் மசோதாவில் லோக்ஆயுக்தா அமைப்பதை கட்டாயமாக்கும் பிரிவை திரிணாமுல் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாது. அதனை மாற்ற வேண்டும் என வலியுறுத்துவோம். மாநிலங்களின் சுய அதிகாரங்களை பறிக்கும் எந்த நடவடிக்கைக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கும். மாநில உரிமைகளை பாதிக்கும் பிரிவுகளை கண்டிப்பாக எதிர்ப்போம் என்றார். 

லோக்பால் அமைப்புக்கு அரசியல் அந்தஸ்து தருவதற்காக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது. இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில் மாநிலங்களவைக்கு லோக்பால் மசோதா வரும் போது அரசு பல பிரச்சினைகளை சந்திக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்