முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டு வசதி கடன் ஊழல்: 2 நகரங்களில் ரெய்டு

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

போபால், டிச.30 - வீட்டு வசதி கடன் பெற்று ரூ. 138.52 லட்சம் ஊழல் செய்துள்ள வழக்கில் போபால் மற்றும் நாக்பூர் நகரங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று 11 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். மகாராஷ்டிர மாநிலம் மற்றும் மத்திய பிரதேச மாநிலம் ஆகியவற்றில் வீட்டு வசதி கடனில் ரூ. 138.52 லட்சத்திற்கு மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஒரு பொதுத்துறை கடன் நிறுவனமும், போபாலை சேர்ந்த 5 கட்டுமான நிறுவனங்களும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் முன்னாள் கிளை மேலாளர் ரவீந்திர ஜே. பத்ரோவ், திருப்பதி  கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம், பிரபாகரன் பில்டர்ஸ் அண்ட் டெவலப்பர்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களின் அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த அதிரடி சோதனையை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தினர்.

2009 முதல் 2010 வரை வீட்டு வசதி கடன் பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆவணங்களை  சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினர்.இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது மோசடி , ஏமாற்றுதல், கிரிமினல் சதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் கூறின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்