முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்ய சபையில் லோக்பால் நிறைவேறும்: பவன் குமார்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி. டிச. 31 - நடந்து முடிந்த பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் ராஜ்ய சபையில் நிறைவேற்றப்படாத லோக்பால் மசோதா அடுத்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 22 ம் தேதி பாராளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் துவங்கியது. இந்த கூட்டத்தொடரின் போது எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஊழலுக்கு எதிரான மசோதா லோக் சபையில் கடந்த 22 ம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து நடந்த நீண்ட விவாதத்திற்கு பிறகு இந்த மசோதா லோக் சபையில் கடந்த 28 ம் தேதி ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

பிறகு இந்த மசோதா நேற்று முன்தினம் ராஜ்ய சபையிலும் தாக்கல் செய்யப்பட்டு அன்றைய  தினமே நிறைவேற்றப்படுவதாக இருந்தது.  ஆனால் கடைசி நேரத்தில் நடந்த குளறுபடிகளால்  இந்த மசோதாவை ராஜ்ய சபையில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் இந்த மசோதா அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்தார்.

பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர்  முடிந்ததை அடுத்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பவன் குமார் பன்சால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,  ராஜ்ய சபையில் லோக்பால் மசோதா நிறைவேற முடியாத நிலை  ஏற்பட்டதற்கு பாரதீய ஜனதா கட்சியே காரணம் என்றார்.

இருந்தாலும் இந்த மசோதா வருகிற பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ராஜ்ய சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டு ராஜ்ய சபையில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

ராஜ்ய சபையில் லோக்பால் மசோதா நிறைவேறாததற்கு மத்திய அரசே காரணம் என்று  பா.ஜ.க. குற்றம் சாட்டுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த போதுதான் மேற்கண்ட தகவலை அவர் கூறினார்.

பா.ஜ.க. வினர் இந்த மசோதாவில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று  பா.ஜ.க.வினர் பிடிவாதம் பிடித்தனர். 

ஆனால் அந்த திருத்தங்களை கொண்டு வர குறைவான காலமே இருந்தது. அதனால்தான்  இந்த மசோதா தள்ளிபோய் உள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் லோக் சபை நேற்று முன்தினம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு விட்டதால் ராஜ்ய சபை கூட்டத்தை நீட்டிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்றும் பவன் குமார் பன்சால் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்