தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச.31 - தலைமை மீது சந்தேகத்தை உருவாக்குபவர்களுக்கும், அவர்களுடனும், நீக்கப்பட்டவர்கள் மீதும் தொடர்பு கொண்டு அவர்களின் பேச்சை நம்பி செயல்படுபவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஆவேசமாகப் பேசியுள்ளார். மிகவும் எதிர் பார்க்கப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு நேற்று வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கூடியது. அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசியதாவது:-
உங்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு இதே டிசம்பர்த் திங்களில் கழகத்தின் வெற்றிக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது என்று நான் சூளுரைத்ததை இம்மியும் பிசகாது உண்மையாக்கி இருக்கும் தமிழக மக்களுக்கு நன்றி உரைக்கும் இவ்வேளையில் இந்தத் தாய் இட்ட கட்டளையை தலை மேல் சுமந்து ஓடிக் களைத்து உறக்கமின்றி உழைத்து சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் கழகம் இமாலய வெற்றியை ஈட்டுவதற்கும் ஆறாவது முறையாக, தமிழகத்தின் ஆட்சி அரியணையில் கழகத்தை அமர்த்துவதற்கும் அயராது பாடுபட்ட என் பாசமுடைய கழக உடன்பிறப்புகளான உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அலைவரிசை கொள்ளை பணத்தையும், அதிகார பலத்தையும், தீயசக்தி கும்பல் திரட்டி வைத்திருந்த வன்முறை கும்பல்களையும் திடத்தோடு எதிர்கொண்டு ஒரு போதும் கழகத்தைக் காட்டிக் கொடுக்காது வெற்றி ஒன்றே நம் இலக்கு என்று பாடுபட வேண்டும்; அப்படியொரு உன்னத உழைப்பை நீங்கள் தப்பாது செய்தால் தமிழகத்தில் எப்படை வரினும் நம் படையே வெல்லும்; இம்மண்ணில் கழகத்தை வெல்வதற்கு இன்னொரு கட்சி கிடையாது என்று இந்தத் தாய் உரைத்ததை வேத வார்த்தைகளாகக் கொண்டு வியர்வையும், உதிரத்தையும் வடித்து உழைத்ததற்கு கிடைத்திருக்கும் பலன் தான் இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்பதை நாம் அறிவோம்.
யார் தயவின்றியும், எத்தகைய ஊன்றுகோல் உதவி இல்லாமலும், ஓடிச் சென்று தங்கப் பதக்கத்தை தட்டிப் பறிக்கிற திராணியும், திடமும் கொண்ட ஒரே இயக்கம் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்த உலகிற்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறோம் என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
திட்டமிட்ட பயணத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம். மொழிக்கொரு சங்கம் கண்டு மூவாப் புகழ் படைத்த மூதூர் மதுரையில் நின்றுகொண்டு அன்று நான் சொன்னது போல உன்னதமான உழைப்பை நீங்கள் கொடுங்கள், கூட்டணியையும், தேர்தலுக்கான திட்டமிடலையும் நான் செய்து முடிக்கிறேன். என் கணக்கு ஒரு போதும் தப்பாது என்று அப்போது சொன்னது இப்போதும் நிறைவேறி இருக்கிறது. உங்களின் தூய்மையான உழைப்பும் அன்பும் எனக்கு எந்நாளும் துணை இருக்கும் போது, இனி எப்போதும் நிறைவேறும்.
கடந்த காலத்தை வென்றிருக்கிறோம். இனி எதிர்காலத்தை எந்நாளும் நம்முடையதாக்க துல்லியமான செயல் திட்டங்களையும், நாம் வகுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது. தமிழக மக்கள் நம் மீது வைத்திருக்கின்ற அளவில்லாத அன்பையும், ஆழமான நம்பிக்கையையும் தங்களின் வாக்களிப்பின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக நான் மாற்றுவேன் என்னும் உறுதிமொழியை தங்கள் ஆள்காட்டி விரல் மையால் வரவேற்று ஆமோதித்து இருக்கிறார்கள். அந்த மக்களின் நம்பிக்கையை, அந்த மகத்தான பாசத்தை, எதிர்பார்ப்பை துளியும் குன்றாமல் குறையாமல் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதில் கழகக் கண்மணிகளாகிய உங்களின் தலையாய பங்களிப்பும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்பதை நீங்கள் அறியாதவர்கள் அல்ல. கருணாநிதியால் சீரழிக்கப்பட்டிருக்கும் நிதிநிலையை சீரமைக்கும் தலையாய பணி ஒரு பக்கம். மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நம்மை நடத்தும் நடுநிலை இல்லாத நடுவண் அரசின் பாரபட்சம் மறுபக்கம். இவற்றிற்கிடையே தான், நம்மிடமிருந்து பேரார்வத்தோடு நிறையவே எதிர்பார்க்கும் தமிழக மக்களுக்கு ஒரு பொற்காலத்தை உருவாக்க வேண்டிய சவாலும், போராட்டமும் நம் முன்னே நிற்கிறது.
கல்லில் இருந்து அவசியமற்ற பகுதிகளை, கழிவுகளை அகற்றிட அகற்றிட உள்ளிருந்து ஒரு தெய்வச் சிலை பிறக்கிறது! அப்படிப் பிறக்கும் அந்த முழு உருவச் சிலைக்கு கண் திறக்கிற போது, அந்த சிலையை செதுக்கும் சிற்பியின் உளியும், அவரது விழியும் எத்தகைய கவனத்தோடு இருக்குமோ, அத்தகைய கவனத்தோடு தான் இன்றைக்கு தமிழகத்தின் அரசாட்சியை நான் நடத்தி வருகிறேன் என்பதை என் அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்கள் அறிவீர்கள்.
இன்னும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு சிறு கதையை உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்.
ஒருவன் நேர்மையான அதிகாரி. தன் பணிகளில் கண்ணும் கருத்துமாக செயல்படக் கூடியவன். லஞ்ச லாவண்யங்களில் துளியும் ஈடுபடாதவன். ஒரு நாள் அவனை சிலர் அணுகி தவறான செயலுக்கு தூபமிட்டார்கள். ஒரே ஒரு காரியம் தான். சின்ன தவறு தான். அதை செய்தால் போதும் வாழ்நாளெல்லாம் வளமாக வாழுகிற அளவுக்கு பணம் கிடைக்கும். சிக்கிக்கொள்வதற்கு வாய்ப்பே கிடையாது... என்றெல்லாம் மூளைச் சலவை செய்து ஆசை வலை விரித்தார்கள்.
எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் யோசித்துச் சொல்கிறேன் என்றவன் வீட்டிற்கு வந்தான். விதிமுறைகளை மீறி இதுவரை எதையும் செய்ததில்லை. ஒரே ஒரு முறை தானே? தவறு செய்யலாமா? கூடாதா? இரவெல்லாம் அவனுக்கு தூக்கம் இல்லை. யாரிடம் கேட்பது? தவறு செய்வதற்கு ஆலோசனையை பிறரிடம் கேட்பது அவமானம் இல்லையா? குழம்பியது அவன் மூளை. முடிவெடுக்கவும் முடியாமல் உறக்கமும் கொள்ளாமல் அவன் யோசித்துக் கொண்டே இருக்க பொழுதும் விடிந்தது. காபி எடுத்துக்கொண்டு அவனது தாய் அறைக்குள் வந்தார். இரவெல்லாம் தூங்காததை மகனின் கண்கள் காட்டிக் கொடுத்தன. அவள் விளக்கம் கேட்பதற்குள் அவனே முந்திக்கொண்டான். சரி, இதற்கான விடையை அம்மாவிடமே கேட்டுவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தவாறே அலுவலகத்தில் நடந்த விஷயத்தை அப்படியே விவரித்தான். இதை செய்வது சரியா அம்மா? என்று கேட்டான். வேண்டாமப்பா. எப்போதும் அதிகாலையில் உன்னை எழுப்பி காபி கொடுப்பதற்கு குறைந்தபட்சம் பத்து நிமிடம் ஆகும். அவ்வளவு ஆழ்ந்து தூங்குவாய். ஆனால் இன்றோ இரவெல்லாம் தூங்காமல் உன் கண்கள் இரண்டும் சிவந்து முகம் சோர்வடைந்து இருக்கிறது. தவறான ஒரு காரியத்தை செய்யலாமா என நினைக்கிற போதே நமக்கு தூக்கம் போய்விடுகிறதே! அதுவே தவறை நாம் செய்துவிட்டால், ஆயுளெல்லாம் நமக்கு தூக்கம் வராதே! நான் அதிகம் படிக்காதவள். உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்... என்று சொல்லிச் சென்றாள் அவனது தாய். அன்று முதல் அவன் முறைகேடான எந்தக் காரியத்தையும் ஏறெடுத்துப் பார்ப்பதையே தவிர்த்தான். அனைவரிடமும் நற்பெயரை ஈட்டினான். தன் வாழ்வுக்குத் தேவையான அளவுக்கு செல்வங்கள் தானாகவே அவனிடம் நேர்மையான வழியில் வந்து சேர்ந்தன.
இந்தக் கதை போலத் தான் நாம் செய்யும் தவறு நாம் செய்யும் துரோகம், அது தூக்கத்தை தொலைத்துவிடும். மனச்சாட்சி நம்மை தினம் பிடித்து உலுக்கும். ஆக, அத்தகைய அமைதியைக் கெடுக்கும் எந்தக் காரியங்களிலும் ஈடுபடாமல் நம் பொதுவாழ்வை அமைத்துக் கொண்டோம் என்றால், நாமும் சரி, நாம் சார்ந்திருக்கும் இயக்கமும் சரி இவ்வுலகமே உற்று நோக்கும் அதிசய பீடமாய் உயர்ந்து நிற்கும் என்பது நிச்சயம்.
எனவே, ஒரு பரிசுத்தமான நிர்வாகத்திற்கு உரியவர்களான நம்மிடம் நமது பணிகளும், செயல்களும் பக்கத் துணையாகி நிற்க வேண்டும். அப்பொழுது தான் இனி எக்காலத்திலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடமிருந்து ஆட்சியை ஒரு போதும் இனி எவராலும் பறிக்க முடியாது என்கிற வரலாற்றுப் புரட்சியை நாம் உருவாக்க முடியும்.
மேலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தின் எல்லையைக் கடந்து தேசிய அரசியலிலும் மிகப் பெரும் சாதனைகளை நிகழ்த்துகிற காலம் நம்மை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது.
அனைத்திந்திய என்றே துவங்கும் நம் இயக்கத்தின் பெயருக்கேற்ப தேசிய அரசியலிலும் ஒரு பொற்காலத்தை 1998லேயே உருவாக்கினோம். அன்று வாஜ்பாயை பிரதமராக்கி பாரதீய ஜனதா கட்சிக்கு முதன் முதலாக இந்த தேசத்தை ஆளுகிற வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்ததில் நம் பங்கு அளவற்றது. நாம் ஒரு அனைத்திந்திய அரசியல் இயக்கம் என்பதை அப்போதே நிரூபித்தோம். இப்போதும் அதனை மேலும் பலப்படுத்தி இந்திய ஆட்சி அதிகாரத்தில் அமரப் போகிற பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக நாம் திகழ்வதற்கான தருணம் கனிந்து கொண்டிருக்கிறது. அடுத்து அமையப் போகும் மத்திய அரசில் நாம் இருப்போம். நாமும் இருப்போம் என்பது திண்ணம்.
நீங்கள் நினைக்கலாம், பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டாண்டு காலம் இருக்கிறதே? அம்மா அதற்குள் நம்மை ஆயத்தப்படுத்துகிறாரே...? இப்போது தானே இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றோம் என்று நினைத்துவிடக் கூடாது.
உலகத்தின் பெரும் பணக்காரரான ராக்ஃபெல்லர் ஒரு முறை விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அருகில் அமர்ந்திருந்தவர் அவரை அடையாளம் கண்டுகொண்டு எங்கே பயணம்? எனக் கேட்டார். தொழில் நிமித்தமாக லண்டன் போகிறேன் என்றார் அவர்.
உலகப் பணக்காரராகிவிட்டீர். ஓய்வெடுக்கக் கூடாதா? இன்னும் இப்படி உழைக்கிறீர்களே...? என்று கேட்க, ராக்ஃபெல்லரோ விமானம் ஓடுதளத்திலிருந்து உயரப் பறந்து இப்பொழுது தான் உச்சத்திற்கு வந்துவிட்டதே? அதனால் விமானத்தின் இஞ்சின் இயக்கத்தை நிறுத்திவிடலாமா? என்று அவர் திருப்பிக் கேட்டாராம்.
அது போலத் தான் நமது வெற்றியை நாளை இந்த நாடே சொல்வதற்கான ஆயத்தப் பணிகளை நாம் இப்போதே தொடங்கிவிட வேண்டும். தொடர்ந்துவிட வேண்டும். ஒரு மரத்தை வெட்டுவதற்கு பத்து மணி நேரமாகும் என்றால் அதில் ஒன்பது மணி நேரத்தை கோடாரியை கூர் படுத்துவதற்கே செலவு செய்வேன் என்று சொன்ன சாக்ரடீசின் கருத்தைத் தான் நான் உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன்.
இரண்டு தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுவிட்டோம் என்னும் மகிழ்ச்சி நமக்கு சோர்வையோ, போதும் என்ற ஓய்வு மனப்பான்மையையோ தந்துவிடக் கூடாது. அடுத்த வெற்றிக்கு இப்போதே ஆயத்தமாக வேண்டும். ஆதலால், இன்னும் பல அரசியல் பொற்காலங்களை உருவாக்குகிற பொறுப்பும் அதற்கான உழைப்பும் உங்களிடம் இருக்கிறது. அதனை செவ்வனே செய்து முடித்துவிட்டால் இன்றைக்கு தமிழகத்தின் உரிமைகளுக்காக, நீர் ஆதார வளங்களைப் பாதுகாப்பதற்காக, தற்காப்பதற்காக, கையேந்திப் போராடுகிற, இது போன்ற நிலை நமக்கு ஒரு போதும் வராது.
தீர்மானிக்கிற இடத்தில் நாம் இருப்போம். அப்படி இருக்கிற போது தேசத்தின் இறையாண்மை குலையாமலும்; தமிழகத்தின் உரிமைகள், உடமைகள் எதிலும் குன்றிமணி அளவுக்கு இழப்போ, குறைபாடோ ஏற்படாமலும் முடிவெடுக்கும் சூழலை நாம் உருவாக்க முடியும். அந்த நிலை, அந்த அரசியல் பொற்காலம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கடந்து, செங்கோட்டையிலும் கழகத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்க வேண்டுமானால் என் அன்பிற்குரிய கழகக் கண்மணிகளும், உடன்பிறப்புகளும் அவரவர் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் போன்ற உலகப் பெரும் ஊழல்களாலும்; சேது சமுத்திரம் திட்டம் போன்ற கணக்கெழுதும் திட்டங்களாலும், கொள்ளையடித்து வைத்திருக்கும் கோடானு கோடி பணத்தைக் கொண்டிருக்கும் தீயசக்திகளின் கும்பலை எதிர்கொண்டு போராடுகிற நம் கழகத்தின் நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், ஒன்றியக் கழகச் செயலாளர்கள், நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள் எந்த அளவுக்கு பொருளாதார ரீதியாக நீங்கள் போராடுகிறீர்கள் என்பதை இந்தத் தாய் அறியாமல் இல்லை. உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். தேவைகள் அறிந்து எப்படி அதை சரி செய்ய வேண்டுமோ அப்படி சரி செய்கிற சாமர்த்தியம் உங்கள் அம்மாவாகிய எனக்கு உண்டு என்பதை நீங்கள் ரணமாக நம்பலாம். அதே வேளையில், இலை வெளியே தெரியும். வெளியே தெரியும். காய் வெளியே தெரியும். கனி வெளியே தெரியும். கிளை வெளியே தெரியும். மரமும் வெளியே தெரியும். ஆனால் இவை அனைத்தையும் தாங்கிப் பிடித்திருக்கும் வேர் வெளியே தெரியாது. அந்த வேர் தான் கழகத்தைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் கோடானு கோடித் தொண்டர்கள் என்பதை கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு லட்சத்திற்கும் மேலான உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
எனவே, தொண்டர்களிடம் நம் அதிகாரத்தை மறந்து தோழமை உணர்வோடு பழக வேண்டும். அது போலவே பொதுமக்களிடம் எளிமையோடு நடந்துகொள்ள வேண்டும். இன்றோடு கழகம் ஆட்சியில் அமர்ந்து ஏறத்தாழ ஏழு மாதம் நிறைவுற்ற நிலையில் கருணாநிதி ஆட்சிக் காலத்திய எந்த ஆடம்பர விழாக்கள் போன்றோ தற்புகழ்ச்சி மாநாடுகள் போன்றோ எதனையும் நடத்தி அரசுப் பணத்தை, பொதுமக்களின் வரிப் பணத்தை வீணடிக்காமல் எப்படி எளிமையான அரசாங்கமாக, அதே நேரத்தில் வலிமையான வருங்காலத்தை தமிழக மக்களுக்கு அமைத்துத் தரும் அரசாக நம்முடைய கழக அரசு திகழ்கிறதோ அதனையே நீங்களும் பின்பற்ற வேண்டும்.
மக்கள் நலத் திட்டங்களை கடைக்கோடி மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கின்ற கடமையை அரசு அலுவலர்களோடு சேர்ந்து நாமும் செய்திட வேண்டும். கழக அரசுக்கு எவ்வகையிலும் அவப்பெயர் நேர்ந்துவிடக் கூடாது என்பதில், கண்ணும் கருத்துமாய் கடமை உணர்ச்சியோடு நாம் பணியாற்ற வேண்டும். அப்படி நம்மை நாமே ஆத்ம பரிசோதனை செய்துகொண்டு மக்கள் சேவையை தூய தொண்டுள்ளத்தோடு செய்வோமேயானால் வருங்காலம் நமக்கு மேலும் மேலும் வசந்த காலமாகும். இரட்டை இலை இங்கு மட்டுமல்ல, தமிழக எல்லை கடந்தும் துளிர்க்கும் செழிக்கும்! ஒரு முறை மரங்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஆண்டவனிடம் மனு கொடுத்ததாம். அதில் இறைவா எங்களை இரக்கமின்றி வெட்டிச் சாய்க்கிற இரும்புக் கோடாரிகளை இனி தயாரிக்க அனுமதிக்காதே என்றனவாம். உடனே ஆண்டவன் சொன்னாராம் கோடாரி தயாரிப்பதை என்னிடம் நிறுத்தச் சொல்வதற்கு முன் நீங்கள் முதலில் அந்தக் கோடாரிகளுக்கு கைப்பிடியாக ஆவதை நிறுத்துங்கள். மரங்களாகிய உங்களிடமிருந்து தானே கூரிய கோடாரிக்கு கைப்பிடிகள் தயாரிக்கப்படுகின்றன...? என்ற போது தலைகுனிந்து நின்றனவாம் மரங்கள். ஆக, தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நாம், நமக்கு துரோகம் செய்யாமல், ஒற்றுமையோடு நின்றோமானால், எப்போதும் சொல்வதையே இப்போதும் சொல்கிறேன், எப்படை வரினும் இப்படையே வெல்லும்.
அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. கட்சிக்காரர்களும் பலவிதம் உண்டு. சிலர் தவறு செய்கிறார்கள். குற்றம் புரிகிறார்கள். அதனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள். அப்படி நீக்கப்படும் போது ஒரு சிலர் சரி நாம் தவறு செய்துவிட்டோம், ஆகவே இது நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்டனை தான். இனிமேல் நமக்கு அரசியல் வேண்டாம், இருப்பதை வைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்று சிலர் முடிவெடுப்பார்கள். இன்னும் சிலர், சரி நம்மை இந்த கட்சியை விட்டு நீக்கிவிட்டார்கள், வேறு கட்சியில் போய் சேர்ந்துவிடலாம், தொடர்ந்து அரசியல் நடத்தலாம் என்று முடிவெடுப்பார்கள். அதில் தவறேதுமில்லை. வாழ்க்கை இருக்கின்றவரை வாழ்ந்தாக வேண்டும். ஒரு கட்சியில் இல்லாவிட்டாலும் இன்னொரு கட்சியில் சேருவதில் தவறில்லை. இந்தக் கட்சியில் இனிமேல் அவர்களுக்கு இடமில்லை என்று நீக்கிய பின்பு, வேறு கட்சியில் அவர்கள் போய் சேருவது தவறு என்று சொல்ல முடியாது. அப்படி முடிவெடுப்பவர்கள் ஒரு சிலர் உண்டு. ஆனால், இன்னும் சிலர் இருக்கிறார்கள். தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாக தொடர்புகொண்டு நாங்கள் மீண்டும் உள்ளே சென்றுவிடுவோம், நாங்கள் மீண்டும் செல்வாக்குடன் இருப்போம், இப்போது எங்களை பகைத்துக் கொண்டால் நாளை நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு உங்களை பழிவாங்கிவிடுவோம், ஆகவே எங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி தலைமை மீது சந்தேகம் வருகின்ற அளவுக்கு பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக் கேட்டு நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்பு கிடையாது. கழக உடன்பிறப்புகளே, நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும், சொல்லும் என்றுரைத்து உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்து, அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளையும், பொங்கல் நல்வாழ்த்துகளையும் தெரிவித்து,
அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க!
என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.
இவ்வாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
-
ஆப்ரிக்க ராட்சத நத்தையால் நடுங்கும் அமெரிக்க நகரம் : மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை
05 Jul 2022புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
புதிய உத்வேகத்துடன் தமிழக உயர்கல்வித்துறை: பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Jul 2022கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
-
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கோஷம்: அவையை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்சே
05 Jul 2022கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
-
விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் ரபேல் நடால்
05 Jul 2022லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
-
அனைவருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் : டெல்லி மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
இதுவரை 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம்: அக்னி வீரர்களில் பெண்கள் மட்டும் 20 சதவீதம் பேர் இருப்பர்: கடற்படை
05 Jul 2022புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
-
விம்பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்டையர்: அரையிறுதிக்கு தகுதி பெற்றது : சானியா - மேட் பேவிக் ஜோடி
05 Jul 2022லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
-
இங்கி.க்கு எதிராக தாமதமான பந்துவீச்சு: இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்
05 Jul 2022பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
-
வாய்ப்பைத் தவறவிட்ட இந்திய அணி: ரவி சாஸ்திரி விமர்சனம்
05 Jul 2022பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
-
கடைசி டெஸ்டில் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட இந்திய ரசிகர்கள் விசாரிக்க இங்கி. கிரிக்கெட் வாரியம் உத்தரவு
05 Jul 2022பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
-
12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு ஓ.பி.எஸ். கடிதம்
05 Jul 2022சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
-
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வருகிறது வார்டு கமிட்டி, ஏரியா சபை : வழிமுறைகள் வெளியீடு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
இடைக்கால தடையை நீக்க மறுப்பு: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் ஏன் இந்த அவசரம்? - -தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
05 Jul 2022மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
-
டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்
05 Jul 2022இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் : சிவ, சிவா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
05 Jul 2022கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
-
புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அனுமதி
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
சென்னையில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : இயக்குனர் வீரராகவ ராவ் தகவல்
05 Jul 2022சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
-
தமிழகத்தில் 98 சதவீத ரேசன் பொருட்கள் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் : உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
-
நீதி போதனை வகுப்புகள் அறிமுகம்: தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
05 Jul 2022சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : ஜெயக்குமார் பேட்டி
05 Jul 2022சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
-
அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி
05 Jul 2022வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி 13 பேர் மாயம்: தேடும் பணி தீவிரம்
05 Jul 2022ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
வெள்ளப் பெருக்கு: குற்றாலம் மெயினருவியில் குளிக்க தடை : ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் நீராடினர்
05 Jul 2022தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு
-
போரினால் சிதைந்த உக்ரைனை மறுசீரமைக்க 750 பில்லியன் டாலர்கள் தேவை: ஜெலென்ஸ்கி
05 Jul 2022கீவ் : போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான தீர்மானங்கள் வெளியானது
05 Jul 2022சென்னை : 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.